வாரத்தில் 3 நாள் விடுப்பு; புதிய சட்டம் ஜூலை 1ல் அமல்

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி-தினம் கூடுதல் பணி நேரம், வாரத்தில் மூன்று நாள் விடுப்பு உள்ளிட்ட மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம், ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. ஊதியம், சமூக பாதுகாப்பு, பணிச் சூழல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் அடிப்படையிலான தொழிலாளர் சட்டத் திருத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-தினம் கூடுதல் பணி நேரம், வாரத்தில் மூன்று நாள் விடுப்பு உள்ளிட்ட மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம், ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.latest tamil news
மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. ஊதியம், சமூக பாதுகாப்பு, பணிச் சூழல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் அடிப்படையிலான தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கடந்த ஆண்டு பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத்திற்கு, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளன.

இதன்படி, ஜூலை 1ல் அமலுக்கு வர உள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இனி நிறுவனங்கள் வாரம், 48 மணி நேர பணி நடைமுறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்களின் பணி நேரத்தை தற்போதைய 8 மணி நேரத்தில் இருந்து 9 - 12 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கேற்ப, வாரத்தில் மூன்று நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும்.தற்போது, தொழிலாளர்களின் அடிப்படை ஊதியப்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் மாத சந்தா செலுத்தப்படுகிறது.


latest tamil news
இனி தொழிலாளர்கள் பெறும் மொத்த ஊதியத்தில், 50 சதவீதம் அடிப்படை ஊதியமாக கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப மாத சந்தா செலுத்த வேண்டும்.இதனால் ஊழியர்கள் தரப்பில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் சந்தா அதிகரிக்கும். இதனால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் குறையும். அதே சமயம் ஊழியர்களுக்காக நிறுவனங்கள் செலுத்தும் மாத சந்தா அதிகரிக்கும். இது, தொழிலாளர்களுக்கு கூடுதல் ஆதாயத்தை வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
26-ஜூன்-202218:56:10 IST Report Abuse
Siva Anju nal work pannale 40 hours dhan work pandrom,ippo idhunaala 48 hours work panna porom,adhavadhu one day extra work pandra maari dhan.yedhuku idhellam....😶
Rate this:
Cancel
25-ஜூன்-202208:08:48 IST Report Abuse
SUBBU,MADURAI இது தேவையில்லாத திட்டம்.சும்மாவே அரசு ஊழியர்கள்எட்டு மணிநேரத்துக்கு பதில் ஐந்து மணி நேரம்தான் அரட்டையடித்துக் கொண்டு வேலை பார்கிறார்கள்.இந்த லெட்சணத்தில் ஒரு நாளைக்கு 9 To 12மணி நேர வேலையெல்லாம்சாத்தியமில்லை.அதற்கு பதிலாக வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு பக்குவமாக எடுத்துக் கூறி அதன்படி அரசு ஊழியர்களை பணி செய்ய வைத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
25-ஜூன்-202207:35:28 IST Report Abuse
Rajasekaran வாரம் ஐந்து நாட்கள் தினசரி எட்டு மணி நேரம் நேர்மையான உழைப்பு : இரு தினங்கள் விடுமுறை : ஆண்டுக்கு இரு வாரங்கள் முழு சம்பளத்துடன் , மேலும் இரு வாரங்கள் அரை சம்பளத்துடன் , அதற்குமேல் மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு தேவையென்றால் சம்பளமின்றி , மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் விடுமுறை , மகப்பேறுக்கு மூன்று மாதம் முழு சம்பளத்துடன் விடுமுறை என்று கட்டாயமாக்கப்பட்டால் நாட்டில் உற்பத்தி பெருகும். செயல் திறனும் மேம்படும். இப்போது அறிவித்திருப்பது சோம்பேறித்தனத்தைத்தான் ஊக்குவிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X