பிரிட்டனில் ஜெகன்நாதர் கோவில்ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி| Dinamalar

பிரிட்டனில் ஜெகன்நாதர் கோவில்ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி

Updated : ஜூன் 24, 2022 | Added : ஜூன் 24, 2022 | |
புவனேஸ்வர்,-''பிரிட்டனில் ஜெகன்நாதர் கோவில் கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒடிசா அரசு செய்யும்,'' என, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி அளித்தார். பாராட்டுஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐரோப்பிய நாடான இத்தாலி மற்றும் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு 11 நாள் பயணமாக சென்றுள்ளார். ஐரோப்பாவின் 12 நாடுகளில் வசிக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புவனேஸ்வர்,-''பிரிட்டனில் ஜெகன்நாதர் கோவில் கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒடிசா அரசு செய்யும்,'' என, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உறுதி அளித்தார்.



latest tamil news




பாராட்டு


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐரோப்பிய நாடான இத்தாலி மற்றும் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு 11 நாள் பயணமாக சென்றுள்ளார். ஐரோப்பாவின் 12 நாடுகளில் வசிக்கும் ஒடிசா மாநில மக்களிடையே இத்தாலியின் ரோம் நகரில் நேற்று உரையாற்றினார்.இதில், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், மாணவர்கள் உட்பட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.ஒடிசாவில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் அரசு சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தி வருவதற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அப்போது, வெளிநாடு வாழ் ஒடிசா மக்கள், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவிட முதல்வர் பட்நாயக் கோரிக்கை விடுத்தார்.


latest tamil news




அனைத்து உதவி



மேலும், ''பிரிட்டனில் ஜெகன்நாதர் கோவில் கட்ட தேவையான அனைத்து உதவிகளையும் ஒடிசா அரசு செய்யும்,'' என, அவர் உறுதி அளித்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X