ஜனாதிபதி பதவி கிடைக்காததால் வெங்கையா நாயுடு விரக்தி:  பா.ஜ., தலைமை ஓரங்கட்டுவதற்கு காரணம் என்ன?

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி தன்னை அறிவிப்பார் என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடைசி நிமிடம் வரை எதிர்பார்த்ததாகவும், அவர் எதிர்பார்ப்பு பொய்யானதை அடுத்து, அவர் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும், மத்திய அமைச்சரவை பதவிகளையும் வகித்த பா.ஜ., மூத்த

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி தன்னை அறிவிப்பார் என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடைசி நிமிடம் வரை எதிர்பார்த்ததாகவும், அவர் எதிர்பார்ப்பு பொய்யானதை அடுத்து, அவர் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.latest tamil newsகட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும், மத்திய அமைச்சரவை பதவிகளையும் வகித்த பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, இப்போது ஓரங்கட்டப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.தென் மாநிலமான ஆந்திராவில் இருந்து, பா.ஜ.,வின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவர் வெங்கையா நாயுடு. அத்வானியின் ரத யாத்திரை காலத்தில் இருந்து, முதன்மையான கட்சிப் பதவிகளை வகித்து வந்தார்.


நம்பிக்கைஆந்திர எம்.எல்.ஏ., வாக துவங்கி, ராஜ்யசபா எம்.பி.,யாக உயர்ந்து, பின், பா.ஜ., பொதுச் செயலர், தேசிய தலைவர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை பிடித்தார்; மத்திய அமைச்சரவையிலும் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்தபோது, பார்லிமென்ட் விவகாரத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன் பின், 2017ல் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவி காலம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தன் பெயர் அறிவிக்கப்படும் என, வெங்கையா நாயுடு பெரிய நம்பிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது.ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின பெண் திரவுபதி முர்மு, தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத வெங்கையா நாயுடு, கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கையா நாயுடுவுக்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியுடன் நெருக்கம் இருந்தது. கடந்த 2013ல் கோவாவில் நடந்த பா.ஜ., பொதுக்குழு கூட்டத்தில், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், வெங்கையாவுக்கான முக்கியத்துவம் கட்சியில் குறையத் துவங்கியதாக கூறப்படுகிறது.


latest tamil newsஆனால், அதையும் தாண்டி வேறு சில காரணங்களையும் அரசியல் பார்வையாளர்கள் வரிசைப் படுத்துகின்றனர்.துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் பொறுப்பு வகித்த வெங்கையாவின் நடவடிக்கைகள், பல சந்தர்ப்பங்களில் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பார்லி.,யில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. ராஜ்யசபா தலைவரின் மைக் உடைக்கப்பட்டது; ஆவணங்கள் கிழித்தெறியப்பட்டன. சபை மாண்பை காக்குமாறு வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.கடும் வாக்குவாதம்அமளியில் ஈடுபட்ட 12 எம்.பி.,க்களை, 'சஸ்பெண்ட்' செய்யுமாறு பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார். 'கடும் நடவடிக்கை தேவையில்லை' என வெங்கையா மறுத்தார். இது தொடர்பாக, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வெங்கையா மீது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வெங்கையா நாயுடுவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டும் என, தி.மு.க.,வின் கட்சி பத்திரிகையான, 'முரசொலி'யில் கட்டுரை வெளியானது. இது, வெங்கையா மீது பா.ஜ., தலைவர்களுக்கு எதிர்மறையான அபிப்ராயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.'துணை ஜனாதிபதி பதவி காலம் முடிவடைந்த பின், டில்லியில் உள்ள மூன்று அரசு பங்க ளாக்களில் எதில் தங்க விரும்புகிறீர்கள்' என, மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்பி வெங்கையாவிடம் அரசு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வெங்கையா, 'ஜனாதிபதி பதவி எனக்கு இல்லை என்பதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே' என, கடுமையாக பதில் சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெங்கையா நாயுடு பெரும்பாலான நேரத்தை தன் சொந்த மாநிலத்திலேயே செலவிடுவதாகவும் சில மூத்த தலைவர்கள் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.அவருக்கு ஜனாதிபதி வாய்ப்பு வழங்கப்படாததற்கு, இது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை ஜனாதிபதி என்ற உயர்ந்த பதவியை வகித்துவிட்ட வெங்கையா நாயுடு, இனி அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அவர் டில்லியிலேயே வசிக்கப் போகிறாரா அல்லது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு குடிபெயர்வாரா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

5 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி ஏற்பு!

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஐந்து ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு, வெங்கையா நாயுடு நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்., காங்.,கைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி, யாகா கிருஷ்ணய்யா, தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த தாமோதர் ராவ் திவாகொண்டா, பார்த்தசாரதி ரெட்டி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பிஷி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஐந்து ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு, வெங்கையா நாயுடு நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்., காங்.,கைச் சேர்ந்த நிரஞ்சன் ரெட்டி, யாகா கிருஷ்ணய்யா, தெலுங்கானாவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த தாமோதர் ராவ் திவாகொண்டா, பார்த்தசாரதி ரெட்டி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பிஷி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.


- புதுடில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
30-ஜூன்-202213:37:34 IST Report Abuse
Narayanan கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருவதற்கு முன் மோடி வந்தார். அவரை ஸ்டாலின் ஒரு மாதிரியாக கையாண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வராமல் இருந்திருந்தால் ஒருவேளை பதவி வழங்கப்பட்டு இருக்கும். பரவாயில்லை அமைதியாக காலத்தை கழிக்கலாம் அத்வானிஜியைப்போல
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
30-ஜூன்-202212:27:38 IST Report Abuse
TamilArasan அதான் துணை ஜனாதிபதியாக இருந்தாச்சே....அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரால் பழங்குடி மக்களுக்கு மிக பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது ...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29-ஜூன்-202220:42:58 IST Report Abuse
sankaranarayanan ஆட்சி முடியும் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தவர் இப்படி எதிர்க்கட்சி தலைவர் சிலையை திறந்து வைக்கலாமா? முரசொலி பத்திரிகையில் இவரைமட்டும் வெகுவாக விமரிசத்ததின் பின் விளைவுகள் இவைகள். திராவிழா கட்சி எப்போதுமே விஞ்ஞான ரீதியில் நல்லவர்களை மாற்றிவிடும், மாட்டியும்விடும் திறன் மிக்கவை. பாவம் நல்லவர். மாட்டிவிடப்பட்டார். மாட்டிக்கொண்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X