'அங்குசம்' வாங்க முடியாத அரசு மருத்துவமனை: கட்டடங்களை பராமரிக்க வழியின்றி தவிப்பு

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
மதுரை,-'யானை வாங்கியும்அங்குசம் வாங்க இயலாத கதை'யாக, மதுரை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்தாலும், பராமரிப்பிற்கு வழியின்றி கட்டடங்கள் பாழடைந்து வருகின்றன. 2005ல் மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு விபத்து தீவிர பிரிவு கட்டடம் உருவாக்கப்பட்டது. கட்டடம் கட்டி 10 ஆண்டுகளைக் கடந்தும் வர்ணப்பூச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை,-'யானை வாங்கியும்அங்குசம் வாங்க இயலாத கதை'யாக, மதுரை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்தாலும், பராமரிப்பிற்கு வழியின்றி கட்டடங்கள் பாழடைந்து வருகின்றன.



latest tamil news



2005ல் மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு விபத்து தீவிர பிரிவு கட்டடம் உருவாக்கப்பட்டது. கட்டடம் கட்டி 10 ஆண்டுகளைக் கடந்தும் வர்ணப்பூச்சு செய்யவில்லை. முன்புறத்தில் மட்டும் பெயருக்கு 2 முறை பெயின்ட் பூசியுள்ளனர்.ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை கட்டடத்தை பராமரிக்காவிட்டால் பத்தாண்டுகள் பாழடைந்த நிலைக்கு சென்றுவிடும்.

கட்டடத்தின் பின்பக்கத்தில் வார்டுகளின் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ள சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு நிரந்தரமாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் நுாறாண்டு கடந்த கட்டடம் போல விரிசலடைந்து பயமுறுத்துகிறது.


latest tamil news


பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஐயாசாமியிடம் கேட்டபோது, ''கட்டடம் உடனடியாக ஆய்வு செய்யப்படும். ஒரே நேரத்தில் எல்லா கட்டடங்களையும் மொத்தமாக பராமரிக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கினால் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜூன்-202217:23:13 IST Report Abuse
Bhaskaran மருத்துவமனைக்குவரும் பார்வையாளரிடம் ரெண்டு ரூபாய் வசூல் செய்து அதனை வைத்து மருத்துவமனை கல் பராமரிப்பு என்று ஒரு திட்டம் கொண்டுவந்தனர் காம்ரேடுகல் எதிர்பால் கைவிடப்பட்டது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜூன்-202215:52:18 IST Report Abuse
D.Ambujavalli மாநில சுகாதாரத் துறையில் அரசு மருத்துவ மனைகள் வருமாம் ஆனால் பராமரிப்புக்கு மட்டும் மத்திய அரசு நிதி வேண்டுமாம் அதையும் விழுங்கி ஏப்பம் விடவா ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-ஜூன்-202213:33:28 IST Report Abuse
raja கொஞ்சம் பொறுங்க மாசு எப்படி புரோ பியெல்லா புறங்கை நக்கலாமுன்னு திட்டம் போட்டு கிட்டு இருக்காரூ.. அது முடிச்சதும் இதுக்கு வருவாரு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X