இடைத்தேர்தல் தோல்வி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு நெருக்கடி

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
லண்டன் :பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவரும், பிரதமர் போரிஸ்
இடைத்தேர்தல் தோல்வி, பிரிட்டன், பிரதமர் போரிஸ் ஜான்சன்  நெருக்கடி

லண்டன் :பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து, அக்கட்சியின் தலைவரும், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் நெருக்கமானவருமான அமைச்சர் ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். கொரோனா காலத்தில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியது, 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம், வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் ஆளும்கட்சி தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


'தற்போதைய அசாதாரண சூழலில் தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பமில்லை' என, ஆலிவர் டவ்டன் தன் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியதாவது:இடைத் தேர்தல் தோல்வியை ஜீரணிப்பது கடினம். மக்கள் படும் துன்பங்களை சரிசெய்ய வேண்டும். முக்கியமாக உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதைத் தான் தேர்தல் முடிவு கூறியுள்ளது. இவற்றை முழுவீச்சில் நடத்திக் காட்டுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202212:50:14 IST Report Abuse
Kalyan Singapore இவர் ஒழிந்தால் நம் விஜய் மல்லையாவை திருப்பி அனுப்ப புதிய உள்துறை செயலாளர் கையெழுத்திடுவார் இவர் கொடுக்கும் பின் பலத்தால் தான் இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் நாடுகடத்த தீர்ப்பளித்தும் தற்போதைய உள்துறை செயலாளர், ஊழல் நாயகி, ப்ரீதி படேல் நாடு கடத்தும் ஆணையில் இரண்டு வருடமாக கையெழுத்திடாமல் காலம் கடத்துகிறார்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஜூன்-202207:51:44 IST Report Abuse
Natarajan Ramanathan இவர்தான் தனது தொழிலில் பிரதமர் பதவியைவிட அதிக சம்பளம் பெற்றதாக சொல்லி புலம்பினாரே பேசாமல் தனது தொழிலையே பார்க்க போய்விடலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X