விவசாயிகள் கூட்டுத் தொழில் துவங்க வாய்ப்பு; உதவி வேளாண்மை இயக்குனர் தகவல்

Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி, : 'விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது' என உதவி வேளாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.இதுகுறித்து விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு நீடித்த வருமானமாக


விக்கிரவாண்டி, : 'விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது' என உதவி வேளாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.இதுகுறித்து விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு நீடித்த வருமானமாக அமைந்திட சிறப்பு கவனம் செலுத்தி, சிறு, சிறு குழுக்களாக சேர்ந்து விவசாயம் சார்ந்த தொழிலை செய்து வருமானத்தை அதிகரிக்க முடியும். குழுக்கள் மூலம் சிறு விற்பனை நிலையங்களை துவங்கி தொடர் வலை அமைப்புகளை ஏற்படுத்தி செயல்பட்டால் சிறப்பாக வியாபாரம் செய்யமுடியும்.

எந்தெந்த பகுதியில் எந்த தொழிலை துவங்கினால் லாபம் பெற முடியும் என விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.விவசாய தொழிலாளர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம். விவசாய தொழில்கள் துவங்க பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பெயர், முகவரி, பொபைல் போன் எண் ஆகிய விபரங்களை வாட்ஸ் ஆப் மூலம் அல்லது குறுஞ்செய்தியாக 94437 78776 மற்றும் 8248 226265 என்ற எண்களில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X