மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கல்| Dinamalar

மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கல்

Added : ஜூன் 25, 2022 | |
கடலுார் : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடலுார் மாவட்ட பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து, உயர்கல்வி சேர்க்கை துவங்கியது. அதையடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் நேற்று முதல் தற்காலிக


கடலுார் : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடலுார் மாவட்ட பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து, உயர்கல்வி சேர்க்கை துவங்கியது.



அதையடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 11:00 மணி முதல் பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து www.dge.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், பள்ளிகளில் நேரடியாக சென்றும் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கடலுார் மாவட்ட பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று துவங்கியது. மாணவர்கள் நேரடியாக சென்று பெற்று வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X