திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986ம் ஆண்டு 6ம் வகுப்பில் சேர்ந்து, 1992ம் ஆண்டு 12ம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகம் வரவேற்றார்.
முன்னாள் மாணவர் அமைப்பைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன், இளவரசன், கோவிந்தராஜ், சக்திவேல் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பலரும் பள்ளிப்பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் இணைந்து தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினர்.பள்ளி வளாகத்தில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 சி.சி.டி.வி., கேமரா பொருத்தி அதனை இயக்கும் நிகழ்ச்சி நடந்தது.சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் முன்னிலையில், நகர மன்ற தலைவர் முருகன் சி.சி.டி.வி., கேமராவை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா, நகர மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி ராஜா, உஷா வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் அமைப்பினர் செய்திருந்தனர்.
Advertisement