திட்டக்குடி : பெண்ணாடம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்சிஆனந்த் அறிவுறுத்தலின் பேரில், கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் முன்னிலையில் பெண்ணாடத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெண்ணாடம் நகர தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் முத்து, கவுரவ தலைவர் சத்யா, நகர பொருளாளர் சாரதி, துணைத் தலைவர் வினோத், துணை செயலாளர் தலித், நகர மாணவரணி தலைவர் தென்னவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கிழக்கு வாள்பட்டறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.