வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
பி.கமல்பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மருத்துவ துறையிலும், வீட்டு வசதி துறையிலும் முறைகேடு நடந்ததாக, சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டிய, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கோவை மாவட்டம் முழுதும் உள்ள, ௧௪ சோதனை சாவடிகள் வாயிலாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. கனிம வள கடத்தல், கிராவல் மண் விற்பனை வாயிலாக, தி.மு.க.,வினர், பல கோடி ரூபாய் கல்லா கட்டுகின்றனர்' என்ற, அடுத்த 'குண்டை' துாக்கிப் போட்டுள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில், கனிமங்களை வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கல், மணல், ஜல்லி, கிராவல் மண் உள்ளிட்ட கனிம வள பொருட்களின் தேவை, கேரளாவில் உள்ளது. இதைப் பயன்படுத்தி, கோவையில் இருந்து கள்ளத்தனமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் லாரி லாரியாக கடத்தப்படுகின்றன.ஆளும் கட்சியான தி.மு.க.,வினரே, இந்தக் கடத்தலிலும், கனிம கொள்ளையிலும் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கையைப் பிசைந்தபடி நிற்கின்றனர்.
![]()
|
சமீபத்தில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில், பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிலர் இறந்தனர். இதுதொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அந்த மாவட்டம் முழுக்க முறைகேடாக செயல்பட்ட குவாரிகளுக்கு, ௫௦௦ கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், அது வசூலிக்கப்படுமா என்பது சந்தேகமே. காரணம், குவாரிகளை இயக்கியவர்களில் பலர் அரசியல்வாதிகள். 'அரசின் சொத்துக்களான கனிம வளங்களை, சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை, அரசு கடுமையாக கையாள வேண்டும்' என, தமிழக அரசை சில மாதங்களுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
![]()
|