பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமதித்த பழனிசாமி ஆதரவாளர்கள்

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: ''அ.தி.மு.க., பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமானப் படுத்தப்பட்டார். பழனிசாமி அதை கண்டிக்கவில்லை,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலரும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:கடந்த, 14ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க முடியாததன் காரணம் குறித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''அ.தி.மு.க., பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமானப் படுத்தப்பட்டார். பழனிசாமி அதை கண்டிக்கவில்லை,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலரும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.latest tamil newsஅவர் அளித்த பேட்டி:கடந்த, 14ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க முடியாததன் காரணம் குறித்து விளக்கப்பட்டது. கூட்டம் முடிந்த நிலையில், திடீரென முன்னாள் அமைச்சர் மூர்த்தி எழுந்து நின்றார். அவரிடம் 'மைக்' கொடுக்கும்படி பழனிசாமி கூறினார். அவரிடம் மைக் கொடுக்கப்பட்டதும், 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். ஒற்றைத் தலைமை தான் கட்சியை வழிநடத்த முடியும்' என்றார். அதை கண்டிக்க வேண்டிய பழனிசாமி, 'வேறு யார் பேசுகிறீர்கள்?' எனக் கேட்டார்.அடுத்து பேசிய எல்லாரும், ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை ஒப்புவிப்பது போல், ஒற்றைத் தலைமை வேண்டும் என பேசினர்.

நான் எழுந்து, 'இப்பிரச்னையை எல்லாரும் பேசுங்கள் எனக் கூறி, பேச வைப்பது என்ன நியாயம்? இது கட்சியை பேராபத்தில் கொண்டு போய் விடும்' என கூறினேன். தற்போது, கட்சி நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும், தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கமும் உள்ளனர். தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையிலான போட்டியாக உள்ளது.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது கட்சியின் தாரக மந்திரம். கடமையை செய்ய பொதுக்குழு சென்றோம். கண்ணியமாக எங்களை நடத்த வேண்டியவர்கள், எப்படி நடத்தினர் என்பதை நாடே பார்த்தது. கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டிய கட்சி, கட்டுப்பாடுகளை மீறி இருந்ததையும் அனைவரும் பார்த்தனர்.

பன்னீர்செல்வம் மேடை ஏறியபோது, அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர் தான் கட்சி பொருளாளர். கணக்குகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படவில்லை. பேசச் சென்றபோது 'மைக்'கை 'ஆப்' செய்தனர். பன்னீர்செல்வமும், பழனிசாமியும், எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது. அதேபோல், அ.தி.மு.க., அவர்கள் இருவரின் சொத்து கிடையாது. இது, தொண்டர்களின் கட்சி. அவர்கள், கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கின்றனர். பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மீது பாட்டில் வீசினர்; தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். பழனிசாமி எழுந்து, 'இது தவறு' என்று கண்டித்தாரா? மேடையில் இருந்த யாராவது தடுத்தனரா? இல்லை. திட்டமிட்டு அவமதித்தனர்.


latest tamil newsஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை அவமதித்தனர். அப்போதும் அவர் அமைதி காத்தார்; புன்முறுவலோடு வந்தார். முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் பதவியை, பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தவர். அவரை தாக்க நினைத்தது சரியா? தி.மு.க.,வுக்கு எதிராக வியூகங்கள் அமைப்பதற்கு பதிலாக, கோட்டைக்குள் குத்து வெட்டு என்ற நிலைக்கு கொண்டு போனது யார்? அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
25-ஜூன்-202218:31:33 IST Report Abuse
Narayanan உள்ளங்கை நெல்லிக்கனிபோல திட்டமிட்டு பழனிசாமி அவர்கள் தனது ஆதரவாளர்களை கொண்டு இப்படி பேசவைத்து வேடிக்கை பார்த்தது உண்மைதான் . மனசாட்சி பேசுமா ? தெரியவில்லை . அதிலும் இந்த ஜெய்குமாரும் , சண்முகமும் வரிந்துகட்டிப் பேசி வருவது கட்சியை பேராபத்தில் கொண்டு செல்லும் . கருணாநிதியவர்கள் நெடுஞ்செழியனை செய்ததுபோல் பழனிசாமி , பன்னீர்செல்வத்தை ஆக்க திட்டமிடுகிறார் . பன்னீர்செல்வத்தின் படத்தின் மீது சண்முகம் ஆட்கள் செய்வது கட்சியை அசிங்கப்படுத்துகிறது . அடக்கம் வேண்டும் பதவி ஆசை வேண்டாம் .
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202215:17:39 IST Report Abuse
Kalyan Singapore மூன்று முறை மாஜி முதல்வராக்கபட்டாலும் மூன்றாம் முறை ஜெயலலிதாவின் அதிருப்திக்கு ஆளானவர் பன்னீர் செல்வம் வெறும் 12 MLA க்கள் ஆதரவு இருந்தபோதிலும் அவரை வரவேற்று அம்மா முன்னேற்ற க்கழகத்தையும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து வெளிவேற்றியவர் பழனிச்சாமி .பி ஜே பி , ஸ்டாலின், சசிகலா ஆகிய மூன்று கட்சிகளையும் அடிக்கடி நாடி அ.தி மு க வை அவமானப்படுத்துபவர் ஓ.பி.ஸ் இவர் ஒற்றைத்தலைமையில் வந்தால் அ.தி மு க வை சசிகலாவுக்கு அடமானம் வைத்து விடுவார்.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
25-ஜூன்-202214:57:03 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தன் நிலை அறியாமல் தன் ஆதரவும் தெரியாமல் பன்னீர்செல்வம் சிலர் பேச்சை கேட்டு செயல் படுகிறார். அவருடைய ஏரியாவில் கட்சியை பலப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் சிறிதும் வரவில்லை என்பது மட்டும் தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X