விமான பயணியர் எண்ணிக்கை உயர்வு

Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
சென்னை-தமிழகத்தில், மே மாதம் பயணித்த விமான பயணியரின் எண்ணிக்கை, 19 லட்சமாகவும், விமானங்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்து 255 ஆகவும் உயர்ந்துள்ளது.கொரோனா மற்றும் சர்வதேச விமான சேவைகள் துவக்கத்திற்கு பின், விமான சேவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் விமானம் வாயிலாக பயணித்தோர் எண்ணிக்கை, மே மாதத்தில் 19 லட்சமாக அதிகரித்து உள்ளது.இதில்,
 விமான பயணியர் எண்ணிக்கை உயர்வு

சென்னை-தமிழகத்தில், மே மாதம் பயணித்த விமான பயணியரின் எண்ணிக்கை, 19 லட்சமாகவும், விமானங்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்து 255 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா மற்றும் சர்வதேச விமான சேவைகள் துவக்கத்திற்கு பின், விமான சேவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் விமானம் வாயிலாக பயணித்தோர் எண்ணிக்கை, மே மாதத்தில் 19 லட்சமாக அதிகரித்து உள்ளது.இதில், சென்னையில் அதிகபட்சமாக, 14.61 லட்சம் பயணியர் மே மாதம் பயணித்தனர். கோவையில் 2.19 லட்சம்; திருச்சியில் 1.12 லட்சம்; மதுரை, 90 ஆயிரம்; துாத்துக்குடியில் 18 ஆயிரத்து 800 பேர் விமான பயணம் மேற்கொண்டனர்.

இது, 2021 மே மாதம் 2.81 லட்சமாக இருந்தது. அப்போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால், 'வந்தே பாரத்' திட்டத்தில், சர்வதேச சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால், விமானப் பயணியரின் எண்ணிக்கை மிக குறைவு.இதேபோல, தமிழகத்தில் 17.35 லட்சம் விமான பயணியர், ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொண்டனர். ஏப்ரலை ஒப்பிடுகையில், மே மாதத்தில் விமானப் பயணியரின் எண்ணிக்கை 1.65 லட்சம் வரை அதிகரித்து உள்ளது.சர்வதேச பயணியர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலும், உள்நாடு பயணியர் எண்ணிக்கையில் ஆறாவது இடத்திலும், சென்னை விமான நிலையம் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X