கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரிப்பு; கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை-''தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை வரவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கோட்டூர்புரத்தில் நகர்ப்புற மேம் பாட்டு கழகம் அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:உலகம் முழுதும், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-''தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை வரவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.latest tamil newsசென்னை, கோட்டூர்புரத்தில் நகர்ப்புற மேம் பாட்டு கழகம் அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:உலகம் முழுதும், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து நாடுகளிலும், ஒமைக்ரானின் 'பிஏ 4, பிஏ 5' வகை கொரோனா வைரஸ் தான் பரவி வருகிறது. தமிழகத்தில், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், 92 சதவீதம் பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள, 8 சதவீதம் பேர் மட்டுமே, மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்களை, அரசின் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்க, சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை மையத்தில், ஐந்து பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, தனி படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையை, மீண்டும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, ஆலோசித்து வருகிறோம்.

தொற்று அதிகரித்து வந்தாலும் உயிரிழப்பு இல்லை. தொற்று ஏற்படு பவர்களுக்கு மிதமான காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, சளி போன்ற உபாதைகள் மட்டுமே ஏற்படுகின்றன. ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்கு பின், அவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்து விடுகின்றனர். ஆனாலும், தொற்று வேகமாக பரவுவதால், பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


latest tamil newsஇதன் வாயிலாக, பள்ளிகளில் மற்ற குழந்தைகளுக்கு தொற்று பரவல் தடுக்கப்படும். தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இன்னும் வரவில்லை. மேலும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனக் கூறவில்லை. நம் உயிரை பாதுகாக்க, அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று கூறுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
25-ஜூன்-202215:47:59 IST Report Abuse
Veeramani Shankar As long as Radhakrishnan was there everything was under control. That's why he was given another portfolio to ensure these soncalled davidian model to make money by creating panic etc..
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஜூன்-202212:14:32 IST Report Abuse
அம்பி ஐயர் அதாவது கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை வரும் வரைக்கும் பேசாமல் இருப்பீர்கள்.... கை மீறிப் போனதும்.... கட்டுப்பாடுகளை விதித்து லாக் டவுன் கொண்டு வந்து மக்களை பாடாய்படுத்துவீர்கள்....??? அதானே....
Rate this:
Cancel
25-ஜூன்-202207:25:48 IST Report Abuse
ஆரூர் ரங் பரவல் அதிகமானால் எல்லாவற்றிலும் காசு பார்க்கலாமே என்றஎண்ணம்? .🙃 புத்தியிருப்பவர்கள் மாஸ்க் போட்டு, கைகழுவி தப்பித்துக் கொள்வர். திமுகவையும் கைகழுவி விடுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X