ரூ.4,447 கோடிக்கு மளிகை டெலிவரி நிறுவனத்தை வாங்குகிறது சொமேட்டோ!

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, குர்காவனை தலைமையிடமாக கொண்டு உடனடி மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை சொமேட்டோ இயக்குனர் குழு அளித்துள்ளது.சொமேட்டோ நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் உணவு டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் பங்குச்சந்தையில்
Zomato, Blinkit, Food_delivery, Grocery_delivery, grofers, Instant_delivery

உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, குர்காவனை தலைமையிடமாக கொண்டு உடனடி மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்புதலை சொமேட்டோ இயக்குனர் குழு அளித்துள்ளது.

சொமேட்டோ நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் உணவு டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலானது. 2021 நவம்பரிலிருந்து இந்நிறுவன சந்தை மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக உணவு டெலிவரியுடன் மளிகையை உடனடி டெலிவரி செய்யும் தொழிலிலும் இறங்க முயற்சித்து வந்தது. தற்போது பிளிங்கிட் நிறுவனத்தை கையகப்படுத்தி மளிகை டெலிவரியில் இறங்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் பிளிங்கிட்டை ரூ.5,300 கோடிக்கு வாங்க ஓப்பந்தம் போட இருந்தனர். சொமேட்டோ பங்குகளுக்கு ஏற்பட்ட சரிவினால் தற்போது ரூ.4,447 கோடிக்கு ஒப்பந்தம் போட உள்ளனர்.


latest tamil news
கடந்த ஆண்டு ஆகஸ்டில் தான் பிளிங்கிட் நிறுவனம் சொமேட்டோவிடம் ரூ.750 கோடி நிதி திரட்டியது. இதன் மூலம் யுனிகார்ன் நிறுவன அந்தஸ்தை பெற்றது. பிளிங்கிட் தாய் நிறுவனமான குரோபர்ஸ் மற்றும் சொமேட்டோ ஆகிய இரண்டின் துணை நிறுவனர்களான அல்பிந்தர் திண்ட்சா மற்றும் தீபிந்தர் கோயல் நீண்ட கால நண்பர்கள். 2000 முதல் 2005 வரை டில்லி ஐ.ஐ.டி.,யில் இருவரும் இணைந்து படித்தவர்கள். குரோபர்ஸ் தொடங்குவதற்கு முன்பாக அல்பிந்தர் சொமேட்டோ சர்வதேச இயக்கங்களின் தலைவராக இருந்தார்.

பிளிங்கிட்டின் ஆண்டு வருவாய் 2022ல் ரூ.263 கோடி, 2021ல் ரூ.200 கோடி மற்றும் 2020ல் ரூ.165 கோடியாக உள்ளது. தற்போதைய கையகப்படுத்தும் ஒப்பந்தம் மூலம் பிளிங்கிட்டின் மிகப்பெரிய பங்குதாரரான சாப்ட்பேங்க் சொமேட்டோவின் 28.71 கோடி பங்குகளை பெறும். டைகர் குளோபல் 12.34 கோடி சொமேட்டோ பங்குகளை பெறும், பிசிசிஎல்., 1.5 கோடி பங்குகளையும், தென் கொரிய முதலீட்டு நிறுவனமான டிஏஓஎல்., 3.66 கோடி பங்குகளை சொமேட்டோவிடம் இருந்து பெறும்.


latest tamil news

வாடிக்கையாளர்கள் ஆர்வம்இந்த கையகப்படுத்தும் திட்டம் குறித்து சொமேட்டோவின் தீபிந்தர் கோயல் கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக விரைவு டெலிவரி என்ற உத்திக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளோம். மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை விரைவாக பெறுவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தத் தொழில் இந்தியாவிலும் உலக அளவிலும் வேகமாக வளர்ச்சியடைவதைக் கண்டோம்.

தற்போது இதனை எங்கள் முக்கிய உணவு டெலிவரியுடன் ஒருங்கிணைத்து செய்ய உள்ளோம். அது சொமேட்டோவுக்கு நீண்ட கால வெற்றிக்கான உரிமையை வழங்கும். தற்போதைய உணவு டெலிவரி தொழில் சீராக லாபத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த சரியான சமயத்தில் அடுத்த முயற்சியில் உள்ளோம், என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
25-ஜூன்-202216:03:26 IST Report Abuse
Vijay D Ratnam அப்படியே தமிழ்நாட்டில் சல்லிசா வரும்போது 120 எம்எல்ஏ சீட்டை வாங்கி போடலாமே. ஜஸ்ட் 12000 கோடி இன்வெஸ்ட் செய்தால் கூலா மூனு நாலு லட்சம் கோடி அள்ளலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X