மத்திய அரசின் சாதனைகளை சொல்லுங்கள்: பா.ஜ., மகளிரணிக்கு அண்ணாமலை ஆலோசனை

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
கோவை: ''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசின் சாதனைகள், அரசின் திட்டங்கள் குறித்து பெண்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்,'' என, மகளிரணிக்கு, மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.பா.ஜ., மாநில மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் தலைமை வகித்தார்.மாநில

கோவை: ''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசின் சாதனைகள், அரசின் திட்டங்கள் குறித்து பெண்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்,'' என, மகளிரணிக்கு, மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.



latest tamil news




பா.ஜ., மாநில மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் தலைமை வகித்தார்.

மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''கட்சியில் மகளிரணியின் பங்கு முக்கியமானது. வரும் தேர்தல்களில் நமது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. வேட்பாளர்களாக நின்று, மக்கள் பிரதிநிதிகளாக வெல்லலாம். மத்திய பா.ஜ., அரசின் திட்டங்கள் எல்லோரையும் சென்றடைந்துள்ளன. திட்ட பயனாளிகளாக உள்ள பெண்களை சந்தித்து, அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். பயனாளிகளுக்கு உரிய திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.


latest tamil news




தேசிய மகளிர் அணி தலைவர் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் நளினி, விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில மகளிரணி துணைத்தலைவர் வத்சலா, செயலாளர் சுதாமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202220:04:38 IST Report Abuse
ஆரூர் ரங் எதிலெல்லாம் 420 டீம்கா 😇 ஸ்டிக்கர் ஒட்டியிருக்குன்னு விளக்கினா போதும். மற்றபடி மத்திய திட்டங்களால் தமிழ்நாடுதான் அதிக பலன் பெற்றிருப்பது என்பதில் ஐயமில்லை. என்ன கொடுமை ன்னா அந்தத் திட்ட விளம்பரங்களில் சம்பந்தா சம்பந்தமில்லாத 😎கட்டுமரம் படத்தைப் போடுறதுதான்.
Rate this:
Cancel
Ram - Dindigul,இந்தியா
25-ஜூன்-202218:28:16 IST Report Abuse
Ram .....
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
25-ஜூன்-202214:40:18 IST Report Abuse
vinu மதியரசின் வேதனைகளை சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X