வனவாசி கல்யாண் ஆசிரமத்தால் அடையாளம் காணப்பட்ட முர்மு

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரவுபதி முர்மு, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான 'வனவாசி கல்யாண் ஆசிரமம்' வாயிலாக அடையாளம் காணப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஜார்கண்ட் முன்னாள் கவர்னரான, ஒடிசா மாநில பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த திரவுபதி முர்மு


சென்னை : பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரவுபதி முர்மு, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான 'வனவாசி கல்யாண் ஆசிரமம்' வாயிலாக அடையாளம் காணப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.latest tamil newsஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஜார்கண்ட் முன்னாள் கவர்னரான, ஒடிசா மாநில பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.கடந்த 2017 ஜனாதிபதி தேர்தலின்போது, திரவுபதி முர்முவின் பெயர் அடிபட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார்.கடந்த சில மாதங்களாகவே, திரவுபதி முர்முவின் பெயர் பேசப்பட்டது. 2017 போல அல்லாமல், இந்த முறை அது உண்மையாகி விட்டது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் துணை அமைப்புகள் 'சங் பரிவார்' என்று அழைக்கப்படுகின்றன.ஏகல் வித்யாலயாசங் பரிவார் அமைப்புகளில் மிகமிக முக்கியமானதாக இருப்பது, 'வனவாசி கல்யாண் ஆசிரமம்!' இது பழங்குடியின மக்களுக்காக சேவையாற்றும் அமைப்பு; 1952-ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டது.இந்தியாவில் 10 சதவீதம் வாழும் பழங்குடியின மக்களை மதம் மாற்றும் முயற்சிகளில் இருந்து தடுப்பது, அவர்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான சேவைகளை வழங்குவது என, இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நடத்தி வரும் 'ஏகல் வித்யாலயா' எனப்படும் ஓராசிரியர் பள்ளிகள், நாடெங்கும் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டன.

இந்த ஓராசிரியர் பள்ளிகள் வாயிலாக, பழங்குடியினர் அதிகமாக வாழும் ஒடிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், வனவாசி கல்யாண் ஆசிரமம் பெரும் அமைப்பாக வளர்ந்தது. அது, பா.ஜ.,வின் அரசியல் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தேர்தல் நேரத்தில் இந்த அமைப்பின் பணிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரள வைக்கும்.முக்கியத்துவம்இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று தான், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.வனவாசி கல்யாண் ஆசிரமம் சொல்லும் ஆலோசனைகள், கோரிக்கைகளுக்கு, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும். 2017-ம் ஆண்டிலேயே இந்த அமைப்பு, பழங்குடியினர் ஒருவரை, ஜனாதிபதியாக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அது நடக்காததால், இந்த முறை அதில், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தேசியத் தலைவர் ராமச்சந்திர காரடி உறுதியாக இருந்துள்ளார்.இது தொடர்பாக, பிரதமர் மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளார். ஒடிசாவை சேர்ந்த திரவுபதி முர்மு, வனவாசி கல்யாண் ஆசிரமத்தால் அடையாளம் காணப்பட்டவர். அந்த அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பே, அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.கடந்த, 1997-ல் பா.ஜ.,வில் இணைந்து, நகராட்சி உறுப்பினரானார். பா.ஜ.,- - பிஜு ஜனாதளம் கூட்டணி ஆட்சியில், ஒடிசா மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


latest tamil newsபரிந்துரை
நன்கு படித்தவர், பா.ஜ., சித்தாந்தத்தின் மீது பற்று கொண்டவர் என்பவர் என்பதால், அவரை கவர்னர் பதவிக்கும், வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பே பரிந்துரைத்துள்ளது. கவர்னராக அவரது அமைதியான, உறுதியான செயல்பாடுகள், பிரதமர் மோடியை கவர்ந்துள்ளன.அதனால் தான், பழங்குடியினர் ஒருவரை, ஜனாதிபதியாக்க வேண்டும் என முடிவு செய்ததும், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., வனவாசி கல்யாண் ஆசிரமம் என, சங் பரிவார் அமைப்புகள் அனைத்தும் ஒரே குரலில், திரவுபதி முர்மு பெயரைபரிந்துரைத்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
26-ஜூன்-202209:07:55 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy இந்தத் திரௌபதியால் கௌரவர்( எதிர்க்கட்சி )களுக்கு சேதாரம் நிச்சயம் வருமென்பது கண்கூடு.
Rate this:
Cancel
25-ஜூன்-202220:12:47 IST Report Abuse
ஆரூர் ரங் ,,,,
Rate this:
Cancel
25-ஜூன்-202215:20:21 IST Report Abuse
ஆரூர் ரங் மலை சாதியினரை அன்னிய மிஷனரிகள் மதம்மாற்ற எடுத்து முதலில் அஸ்திரம் பொய்ப்பிரசாரம். மலை சாதியினர் இந்துக்களே இல்லை என்ற பிரச்சாரம் மூலம்தான். அவர்கள் பார்வையில் மலைமகளும் அவரது மகன் முருகனும் மலைசாதிக் கடவுள்கள் இல்லையாம். வனவாசி கல்யாண்.🤔 ஆசிரமம் இதுபோன்ற பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து திரௌபதி போன்றோரை உருவாக்கியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X