மதுரை- செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் !

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
மதுரை: மதுரை -- செங்கோட்டை, நெல்லை -- செங்கோட்டை, நெல்லை -- திருச்செந்துார் பிரிவுகளில் ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதன் விவரம்மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை -- மதுரை முன்பதிவில்லாத

மதுரை: மதுரை -- செங்கோட்டை, நெல்லை -- செங்கோட்டை, நெல்லை -- திருச்செந்துார் பிரிவுகளில் ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதன் விவரம்மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை -- மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:35 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.



latest tamil news





நெல்லை - செங்கோட்டை



நெல்லை -- செங்கோட்டை- - நெல்லை பகுதிக்கு இரண்டு ஜோடி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681) நெல்லையில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு காலை 11:25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை - செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) நெல்லையில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்பட்டு மாலை 5:20 க்கு நெல்லை வந்து சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10:05 மணிக்கு புறப்பட்டு பகல் 12:25 மணிக்கு நெல்லை வந்து சேரும்.இந்த ரயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லுார், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்செந்துார் -- நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06405) திருச்செந்துாரிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு பகல் 12.00 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுமார்க்கத்தில் நெல்லை- - திருச்செந்துார் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) நெல்லையில் இருந்து மாலை 4:05 மணிக்கு புறப்பட்டு 5: 45 மணிக்கு திருச்செந்துார் சென்று சேரும். இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லுார் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X