50 ஆண்டு கருக்கலைப்பு உரிமை ; அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
வாஷிங்டன்: நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இது அங்கு வாழும் பெண்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. கருக்கலைப்பு எங்கள் அடிப்படை உரிமை என கோரும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக கேட்டு பல அமெரிக்க பெண்கள் அமைப்பினர் கடந்த 1973

வாஷிங்டன்: நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இது அங்கு வாழும் பெண்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. கருக்கலைப்பு எங்கள் அடிப்படை உரிமை என கோரும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.latest tamil newsகருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக கேட்டு பல அமெரிக்க பெண்கள் அமைப்பினர் கடந்த 1973 முதல் சட்ட போராட்டங்கள் நடத்தி இந்த தார்மீக உரிமையை 50 ஆண்டு காலமாக பின்பற்றி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க உச்ச அதிகாரம் கொண்ட சுப்ரீம் கோர்ட் ரத்து செய்வதாக தெரிவிக்கிறது.


latest tamil news

நல்லதா ? கெட்டதா ?


ஆனால் " இது கோர்ட்டிற்கும் , தேசத்திற்கும் ஒரு கவலையான நாள் " என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, " காலை வணக்கம் சொல்லி பயனில்லை. இது ஒரு அவப்படுத்தும் தீர்ப்பு , மேலும் பெண்களின் உரிமைக்கும், உடல் நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் கேடு தருகிறது" என்றார்.


latest tamil newsநீண்ட காலமாக இருந்த சட்ட ரத்தால் பல பெண்களின் உரிமை பாதிக்கப்படுவதாக கருக்கலைப்பு ஆதரவாளர் ஒருவர் கூறுகிறார்.

கோர்ட்டின் உத்தரவை அடுத்து பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும். இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
25-ஜூன்-202218:01:49 IST Report Abuse
Balakrishnan Kamesh கரு என்பது ஒரு உயிர் .. கருவை கலைப்பது கொலை செய்ததற்கு சமம் . .. சட்டம் சரியானது தான், இதை எதிர்க்கும் மக்கள்தான் சரியில்லை ..
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-ஜூன்-202217:39:58 IST Report Abuse
Duruvesan பர்மா பஜார்ல வியாபாரம் எப்படி போகுது? சர்ச்க்கு போறீகளா?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
25-ஜூன்-202217:13:55 IST Report Abuse
Rafi விரும்பியவர்களோடு உறவு வைத்துக்கொள்வது சட்ட அதிகாரம் வழங்கியது நமது உச்ச நீதிமன்றம்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
25-ஜூன்-202220:13:20 IST Report Abuse
Barakat Aliஅதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஈரவெங்காயம் சொல்லியிருக்கிறார் ..... "ஒருவனுடைய மனைவி மற்றொருவனை விரும்புவதில்லை தவறில்லை" என்று ....... அவரது கொள்கைகளை போலி தமிழர்களோடு சேர்ந்து நாம் ஏன் ஆதரித்து இஸ்லாத்துக்கு எதிராக நடக்க வேண்டும் ????...
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202213:36:03 IST Report Abuse
Rafi உலக வாழ்க்கையில் பல தூதுவர்கள் அணைத்து பகுதிகளுக்கும் வந்துள்ளார்கள் அவர்கள் ஒரு இறைவனை மட்டுமே வணங்க சொல்லியுள்ளார்கள் என்பதை நம்ப வேண்டும், அப்படியிருக்க அவற்றுக்கு எதிராக இருப்பதை எந்த இஸ்லாமியர்களும் ஆதரிக்க மாட்டார்கள், அரசியல் என்பது வேறு இறைவணக்கம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈர வெங்காயம் என்பவர் கிடையாது. இந்தியாவில் இந்து மதத்தில் அடிமை படுத்தப்பட்ட மக்களை சிந்தனை புறட்சி ஏற்படுத்தியதனால் ஈ வெ ரா அவர்களை தந்தை பெரியார் என்று தான் தமிழர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சியை வித்திட்டுவிட்டது. குரானை போல் உலக மக்கள் ஒன்றிணைந்து கூட இது போன்ற ஒன்றை கொண்டுவரமுடியாது என்று படைத்த இறைவன், மக்களுக்கு சவால் விட்டுள்ளான் என்பது குறிப்பிட தக்கது. புனை பெயரில் யாரையும் விழிப்பது கூட இஸ்லாம் கண்டித்துள்ளது என்பதையும் நினைவு படுத்துகின்றேன். சகோதரா...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-ஜூன்-202218:53:06 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\அவர்கள் ஒரு இறைவனை மட்டுமே வணங்க சொல்லியுள்ளார்கள் என்பதை நம்ப வேண்டும்,\\ ... Rafi, இதுதான் உங்களுடைய பெரிய பிரச்சினை .....நீங்க நம்புங்க, அதை யாரும் வேணாம்னு சொல்லலை, சொல்லவும் மாட்டாங்க .... அந்த ஒரு நம்பிக்கை மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கும் அவரவர்கள் மதத்தில் இருக்குமல்லவா ? அந்த ஒரு சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை நீங்கள் ஏன் கொள்ளவில்லை ? அரசியல் வேறு, இறை வணக்கம் வேறு என்பதும் சரிதான் ... ஆனால் அப்படி இறைவணக்கத்தை இழித்துப் பேசி அரசியல் கட்சியுடன் நீங்க ல் இருப்பீர்களா என்பதுதான் கேள்வி ? அதற்கு உங்களிடம் பதில் உள்ளதா ? ஈ வெ ராமசாமி என்ன புரட்சி பண்ணினார்ன்னு இங்கே இருக்கிறவங்க எல்லோருக்கும் தெரியும்..... அதிலே புதுசா கட்டுவதற்கு கதை ஒன்றும் இல்லை......கடைசியாக, இறைவன் மக்களுக்கு சவால் விட்டிருக்கிறானா ? இறைவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்று எல்லோரும் நம்பும்போது, அவன் எதற்கு மக்களிடம் சவால் விடவேண்டும் ? தங்களது கருத்துக்கள் ஒரு குழப்ப நிலையை காண்பிக்கின்றன ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X