50 ஆண்டு கருக்கலைப்பு உரிமை ; அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து| Dinamalar

50 ஆண்டு கருக்கலைப்பு உரிமை ; அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (31) | |
வாஷிங்டன்: நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இது அங்கு வாழும் பெண்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. கருக்கலைப்பு எங்கள் அடிப்படை உரிமை என கோரும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக கேட்டு பல அமெரிக்க பெண்கள் அமைப்பினர் கடந்த 1973

வாஷிங்டன்: நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்டத்தை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இது அங்கு வாழும் பெண்களுக்கு பெரும் கவலையை தந்துள்ளது. கருக்கலைப்பு எங்கள் அடிப்படை உரிமை என கோரும் கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



latest tamil news



கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக கேட்டு பல அமெரிக்க பெண்கள் அமைப்பினர் கடந்த 1973 முதல் சட்ட போராட்டங்கள் நடத்தி இந்த தார்மீக உரிமையை 50 ஆண்டு காலமாக பின்பற்றி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க உச்ச அதிகாரம் கொண்ட சுப்ரீம் கோர்ட் ரத்து செய்வதாக தெரிவிக்கிறது.


latest tamil news





நல்லதா ? கெட்டதா ?


ஆனால் " இது கோர்ட்டிற்கும் , தேசத்திற்கும் ஒரு கவலையான நாள் " என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, " காலை வணக்கம் சொல்லி பயனில்லை. இது ஒரு அவப்படுத்தும் தீர்ப்பு , மேலும் பெண்களின் உரிமைக்கும், உடல் நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் கேடு தருகிறது" என்றார்.


latest tamil news



நீண்ட காலமாக இருந்த சட்ட ரத்தால் பல பெண்களின் உரிமை பாதிக்கப்படுவதாக கருக்கலைப்பு ஆதரவாளர் ஒருவர் கூறுகிறார்.

கோர்ட்டின் உத்தரவை அடுத்து பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்படும். இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X