பகலில் சாலையில் யானைகள் உலா: வனத்துறை கண்காணிப்பு

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், தற்போது மழை பெய்து கருகிய வனங்கள் பசுமைக்கு மாறியுள்ளது. இதனால் யானைகள் உணவுக்காக மக்கள் குடியிருப்புகளை ஒட்டியும், சாலையோர வனப்பகுதிகளுக்கும் வருகிறது.பகல் நேரத்திலும் யானைகள் சாலைக்கு வருவதால், வாகன ஓட்டுநர்கள், குடியிருப்புவாசிகளும் அச்சமடைந்துள்ளனர். இதனால், வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில்
பகலில் சாலையில் யானைகள் உலா: வனத்துறை கண்காணிப்பு

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், தற்போது மழை பெய்து கருகிய வனங்கள் பசுமைக்கு மாறியுள்ளது. இதனால் யானைகள் உணவுக்காக மக்கள் குடியிருப்புகளை ஒட்டியும், சாலையோர வனப்பகுதிகளுக்கும் வருகிறது.

பகல் நேரத்திலும் யானைகள் சாலைக்கு வருவதால், வாகன ஓட்டுநர்கள், குடியிருப்புவாசிகளும் அச்சமடைந்துள்ளனர். இதனால், வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.


latest tamil news



தற்போது சேரம்பாடி வனச்சரகத்தில் அதிகளவிலான யானைகள் முகாமிட்டுள்ளது. சேரங்கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30 க்கும் மேற்ப்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மேற்பார்வையில் வனக்குழுவினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news




கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்க்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X