கந்துவட்டி கேட்டு தாக்குதல் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
சேலம், அமானி கொண்டலாம்பட்டி, மல்லாக்கா நகரை சேர்ந்தவர் பாண்டியன், 63. இவரது மனைவி கலா, 58, மருமகள் சாந்தகுமாரி, 36. இவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணி போலீசார் தடுத்து அவர்களை மீட்டனர்.பின், பாண்டியன் கூறியதாவது: மகன் ரமேஷ், 38, வெள்ளி பட்டறை வைத்து, வீட்டில் தொழில் செய்கிறோம். தொழில் அபிவிருத்திக்கு, அரசமரத்து


சேலம், அமானி கொண்டலாம்பட்டி, மல்லாக்கா நகரை சேர்ந்தவர் பாண்டியன், 63. இவரது மனைவி கலா, 58, மருமகள் சாந்தகுமாரி, 36. இவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணி போலீசார் தடுத்து அவர்களை மீட்டனர்.
பின், பாண்டியன் கூறியதாவது:
மகன் ரமேஷ், 38, வெள்ளி பட்டறை வைத்து, வீட்டில் தொழில் செய்கிறோம். தொழில் அபிவிருத்திக்கு, அரசமரத்து காட்டூரை சேர்ந்த கோவிந்தராஜ், 58, என்பவரிடம், 15 ஆண்டாக, இதுவரை, 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளோம். அதற்கு வட்டியுடன் சேர்த்து, தற்போது, 64 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி தருகிறார். கடந்த, 22ல் அடியாட்களுடன் வீட்டுக்கு வந்து, கந்துவட்டி கேட்டு, எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. முறையாக விசாரிக்கவும், நியாயம் கேட்டும் தீக்குளிக்கும் முடிவுக்கு வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்
கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X