40 வயது கர்ப்பமும் ஸ்ட்ரெஸும் - ஆலோசனை கூறுகிறார் மருத்துவர் கண்ணகி உத்தரராஜ்

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பெண்கள் 28 வயதுக்குள் முதல் குழந்தையை பெற்றெடுத்தால் பிரசவம் எளிதாக இருக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது. ஆனால் இன்றைய பெண்கள் படிப்பு, வேலை என வாழ்க்கையில் செட்டிலாகவே ஆண்டுகள் கழிவதால், பலருக்கும் திருமண வயது தள்ளிக்கொண்டே செல்வது சகஜமான ஒன்றாகிவிட்டது. அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தைப்பிறப்பை தள்ளிப்போடுவதும் பலரிடமும் பேஷனாகி வருகிறது.
கருத்தரிப்பு, குழந்தைபிறப்பு, கர்ப்பகாலம், பெண்கள், கண்ணகிஉத்தரராஜ், டவுன்சிண்ட்ரோம், குழந்தை, ஆரோக்கியகுறிப்புகள், ஹெல்த்டிப்ஸ், 
praganancy, latepraganancy, child, problemsinlatepregnancy, healthtips, health, tips

பெண்கள் 28 வயதுக்குள் முதல் குழந்தையை பெற்றெடுத்தால் பிரசவம் எளிதாக இருக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது. ஆனால் இன்றைய பெண்கள் படிப்பு, வேலை என வாழ்க்கையில் செட்டிலாகவே ஆண்டுகள் கழிவதால், பலருக்கும் திருமண வயது தள்ளிக்கொண்டே செல்வது சகஜமான ஒன்றாகிவிட்டது. அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தைப்பிறப்பை தள்ளிப்போடுவதும் பலரிடமும் பேஷனாகி வருகிறது. போதாக்குறைக்கு வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவையும் குழந்தைப்பிறப்பை தள்ளி வைக்கிறது. இதனால் பல்வேறு சிகிச்சைக்கு பின்னரே குழந்தையை பெற வேண்டியுள்ளது.

குறிப்பாக 35 அல்லது 40 வயதை கடந்து குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிரபலமான செலிபிரிட்டிகள் மட்டுமின்றி சாதாரண வர்க்கத்தினர் உட்பட பலரும் இந்த பட்டியலில் உள்ளனர். அவர்கள் பல்வேறு இடையூறுகளை தாண்டி குழந்தை பெற்ற மகிழ்ச்சியை கூட அனுபவிக்க முடியாமல் பலவிதமான விமர்சனங்களையும் அப்போது எதிர்கொள்வதால் மனரீதியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.


latest tamil newsஏனெனில், தற்போதுள்ள சூழலில் 40 வயதுக்கு பிறகு கருத்தரிக்க விரும்பினால் கருத்தரிப்பை இயற்கையாக எதிர்கொள்வது சற்று கடினமாகவே உள்ளது. கருத்தரிப்பதற்கு உரிய சிகிச்சைகள் மேற்கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கக்கூடும். சாதாரண மாத்திரைகள் மூலமே கருத்தரிப்பதை ஊக்கப்படுத்த முடியும். ஆனால், ஆரோக்கிய குறைபாடு, இனப்பெருக்க உறுப்புகள் ஒத்துழைப்பில் குறைபாடு இருந்தால், செயற்கை முறை சிகிச்சையில் கருத்தரிப்பதும் சாத்தியமாகிறது. எனவே நாற்பதை கடந்த பெண்கள் கருத்தரிக்கும்போது பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து கோவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனை, பெர்டிலிட்டி மைய டாக்டரும், தாமரை பெர்டிலிட்டி மற்றும் வுமன் ஹெல்த் சென்டர் இயக்குநருமான சி.வி.கண்ணகி உத்தரராஜ் கூறியதாவது:


latest tamil newsநாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கருத்தரிக்கும்போது உயர் ரத்த அழுத்தம், நஞ்சுக்கொடி குறைபாடு, கர்ப்பக்கால நீரிழிவு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. இது முக்கியமான ஒன்றாகும்; குரோமோசோம் குறைப்பாட்டால் வரக்கூடியது. இதயம் தொடர்பான பிரச்னைக்கும் இது வழிவகுக்கும். பார்க்க சாதாரண குழந்தையைப் போல் தோற்றம் அளித்தாலும் வளர்ச்சியில் குறைபாடு இருக்கும். கர்ப்பம் தரித்த 12வது வாரத்திலேயே கண்டுபிடிக்க முடியும். என்.ஐ.பி.டி., பரிசோதனை மூலமாக உறுதிப்படுத்தலாம். இதனால் தாய், மற்றும் குழந்தைக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய இன்னல்களை தவிர்க்கலாம்.

இவர்களுக்கு வயது வித்தியாசம் காரணமாக நார்மல் டெலிவரி ஆகவும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகும் சிலருக்கு இந்த நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.


latest tamil newsஇதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் கருத்தரிக்கும் போது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் அனைவருக்குமே ஒருவித ஸ்ட்ரெஸ் இருக்கும்; அதனால், குழந்தை பேறு காலத்தில் இதயம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. எனவே முன்னதாக குழந்தை பெறுவதில் ஏதாவது பாதிப்பு உள்ளதா என கார்டியாலஜிஸ்டுகளின் ஒப்புதல் பெற வேண்டும். இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் டெலிவரி நேரத்தில் பாதிப்பு வரக்கூடும். எனவே தற்போது கருத்தரிப்பு சிகிச்சைக்கு வரும் அனைவருக்குமே எக்கோ டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது.

மேலும், 40வது வயதில் கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் வரக்கூடிய அறிகுறிகள் இருக்கலாம். எனவே இதற்கான ஸ்கிரீனிங், பரிசோதனையும் அவசியம்.

எனவே ரத்தப்பரிசோதனை, சர்க்கரை அளவு, கருப்பை, இதயம், சிறுநீரகம், கருப்பை வாய் ஸ்கேனின் போன்றவற்றை பரிசோதனைகளை சரிவர பார்த்த பின்னரே கருத்தரிப்பு சிகிச்சையை துவக்க வேண்டும்.


latest tamil news


25 வயதிலுள்ள ஒருவர் குழந்தை வளர்ப்பதற்கும், 40 வயதில் குழந்தை வளர்க்கவும் நிறைய வித்தியாசம் இருக்கும். பலருக்கும் குழந்தைகளை கவனிக்க சரிவர உடல் ஒத்துழைக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் 'பிட்' ஆக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. இவ்வாறு, டாக்டர் சி.வி.கண்ணகி உத்தரராஜ் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priya - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202221:18:11 IST Report Abuse
Priya Super 👌
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X