தமிழகத்தில் கோவிட் : ஆயிரத்ததை தாண்டியது ; ஒரே நாளில் 1,382 பேர் பாதிப்பு

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 25 ம் தேதி) ஒரே நாளில் 1,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 25) 24,981 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 607; செங்கல்பட்டு 240; திருவள்ளூர் 83,கோவை 89 , காஞ்சிபுரம் 66, தூத்துக்குடி 60, கன்னியாகுமரி 49,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 25 ம் தேதி) ஒரே நாளில் 1,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 25) 24,981 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 607; செங்கல்பட்டு 240; திருவள்ளூர் 83,கோவை 89 , காஞ்சிபுரம் 66, தூத்துக்குடி 60, கன்னியாகுமரி 49, திருநெல்வேலி 17, ராணிப்பேட்டை,16, மதுரை 15; சேலம் 10; திருவண்ணாமலை, திருச்சி 9 , தென்காசி, பெரம்பலுார் 8, வேலுார் 7 ,தஞ்சாவூர், தேனி மற்றும் நாமக்கல் 6, நீலகிரி, ஈரோடு 5, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம் திருப்பூர் 4, கிருஷ்ணகிரி 2, கடலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி,கரூர், மயிலாடுதுறையில் தலா ஒருவரும் திண்டுக்கல் , அரியலுார், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டஙகளில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,359 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,66,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று 617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,22,169 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.

சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (24 ம் தேதி) 616 ஆக இருந்த நிலையில் இன்று (25ம் தேதி)சென்னையில் 607 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,912 ல் இருந்து 6,677 ஆக அதிகரித்துள்ளது.



மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்


latest tamil news



latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X