உத்தவுக்கு எதிராக போர்கொடி ஏன்? சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பதில்!

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை:'மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கைகோர்த்ததை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான், அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளோம்' என, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை:'மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கைகோர்த்ததை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான், அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளோம்' என, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத
காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இவர்கள் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
இதனால், மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான பேச்சு நடத்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் பலனில்லை.
இந்நிலையில், அதிருப்தி குழுவிற்கு 'சிவசேனா பாலாசாகேப்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக, அதில் உள்ள எம்.எல்.ஏ., தீபக் கேசர்கர் கூறியுள்ளார். இதற்கு உத்தவ் தாக்கரே, 'சிவசேனா, பால் தாக்கரே பெயர்களை பயன்படுத்த, யாருக்கும் உரிமையில்லை' என்றார்.
இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ., தீபக் கேசர்கர் கூறியதாவது: ஷிண்டே ஆதரவு குழுவில், ௪௦க்கும் அதிகமான சிவசேனா எம்.எல்,ஏ.,க்கள் உள்ளனர். அதனால்தான் எங்கள் குழுவுக்கு 'சிவசேனா பாலாசாகேப்' என, பெயர் வைத்துள்ளோம். உத்தவ் தாக்கரே மீது எங்களுக்கு எந்த மோதலும் இல்லை. சிவசேனா, பா.ஜ.வுடனான கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கைகோர்த்ததை, தொண்டர்கள் சிறிதும் விரும்பவில்லை. நாங்கள், பா.ஜ.,வுடனான கூட்டணியை புதுப்பிக்க விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடந்தது. 'போர்க்கொடி துாக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரி, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயைடுத்து, ஷிண்டே உட்பட16 எம்.எல்.ஏ.,க்களை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலிடம், கட்சியின் கொறடா சுனில் பிரபு கடிதம் கொடுத்தார்.


இதையடுத்து, தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு, 16 எம்.எல்.ஏ.,க்களுக்கும், மஹராஷ்டிரா சட்டசபை முதன்மை செயலர் ராஜேந்திர பகவத், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், அதிருப்தி குழுவில் உள்ள எம்.எல்.ஏ., தானாஜி சாவந்த்தின் அலுவலகம், புனேயில் உள்ளது. அதனை, சிவசேனா கட்சியினர் நேற்று சூறையாடினர். உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்களை கண்டித்தும், சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் மும்பை, தானேவில் 144- தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news




செலவு எவ்வளவு?

ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், முதலில் மும்பையில் இருந்து குஜராத்தின் சூரத் நகரில் உள்ள, 'ரிசார்ட்'டுக்கு சென்றனர். பின், அங்கிருந்து, அசாமின் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இடம் மாறினர்.அந்த ஹோட்டலில், 70 அறைகள், ஒரு வாரத்துக்கு, 'புக்கிங்' செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 56 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தவிர, உணவு உள்ளிட்டவற்றுக்கு, ஒரு நாளைக்கு, எட்டு லட்சம் ரூபாய் என, ஏழு நாட்களில், 56 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆக, இந்த ஹோட்டலில் மட்டுமே, 1.12 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.சூரத்தில் இவர்கள் தங்கியிருந்த, 'ரிசார்ட்'டில் ஒரு நாளைக்கான சாதாரண அறையின் வாடகை, 2,300 ரூபாயாகும். இங்கு சில லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளன. சூரத்தில் இருந்து கவுஹாத்திக்கு செல்ல, தனி விமானம் பயன்படுத்தப்பட்டுஉள்ளது.


இதற்காக, ஒரு வழிக் கட்டணமாக, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, மேலும் இரண்டு தனியார் சிறிய ரக விமானங்களும், இவர்களுக்காக 'புக்கிங்' செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாளொன்றுக்கு, 35 லட்சம் ரூபாய் கட்டணமாகும். எரிபொருள் உள்ளிட்ட மற்ற கட்டணங்களும் உண்டு.ஆக, இதுவரை, இவர்களுக்கான செலவு சில கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-202208:27:31 IST Report Abuse
Kasimani Baskaran இந்துக்களின் வாக்குகளை வாங்கி அவர்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கூட்டத்திடம் முதல்வர் பதவி ஆசையில் விற்று விட்டதை விற்கப்பட்ட அடிமைகள் சரி செய்ய முயல்கிறார்கள்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
26-ஜூன்-202208:12:22 IST Report Abuse
krish கலிகாலம். நடப்பு அரசியலில் யாரும் புனிதர் அல்ல என்பதே நிதர்சனம்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
26-ஜூன்-202208:00:57 IST Report Abuse
Darmavan கூட நட்பு உத்தவ் செய்தது .மக்கள் ஆதரவு இல்லாதபோது எதிரிகளுடன் கூட்டுசேர்ந்து பதவிக்கு வந்தது தவறு பால்தாக்கரேக்கு செய்யும் துரோகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X