மனசோர்வை நீக்கும் மாலா கிரதனா பயிற்சி| Dinamalar

மனசோர்வை நீக்கும் 'மாலா கிரதனா' பயிற்சி

Added : ஜூன் 25, 2022 | |
சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் ஓர் அங்கமான, விவேகானந்தர் இல்லத்தின் பண்பாட்டு மையத்தில், 'மாலா கிரதனா' என்ற, நம் பாரம்பரிய மாலை தொடுக்கும் அற்புதமான கலையை கற்பிக்கும் நான்கு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தொன்மை வாய்ந்த மாலை கட்டும் கலையை பேணி பாதுகாப்பதற்காக, இந்த பயிற்சி அளிக்கப் பட்டது. இந்த கலையை வெறும் வியாபாரமாக பார்க்காமல், ஒப்பற்ற அழகியல் மற்றும் தெய்வீகத்தை
மனசோர்வை நீக்கும் 'மாலா கிரதனா' பயிற்சி

சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் ஓர் அங்கமான, விவேகானந்தர் இல்லத்தின் பண்பாட்டு மையத்தில், 'மாலா கிரதனா' என்ற, நம் பாரம்பரிய மாலை தொடுக்கும் அற்புதமான கலையை கற்பிக்கும் நான்கு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தொன்மை வாய்ந்த மாலை கட்டும் கலையை பேணி பாதுகாப்பதற்காக, இந்த பயிற்சி அளிக்கப் பட்டது. இந்த கலையை வெறும் வியாபாரமாக பார்க்காமல், ஒப்பற்ற அழகியல் மற்றும் தெய்வீகத்தை உணர்ந்து கொண்டாடவும், அனைவரும் கற்று பயன் பெறுவதற்குமான உயர்ந்த நோக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதில் இருந்தும், ௧௬ வயதுக்கு மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கலையில் கைதேர்ந்த பயிற்சியாளர்கள் ராகுல், வெங்கி பாலாஜி ஆகியோர் பயிற்சிகளை முன்னின்று நடத்தினர். சரமாலை கட்டுவதில் துவங்கி, ஆண்டாள், மீனாட்சிக்கு கட்டும் ஜடை, கிளி மாலை விசேஷம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இறைவனுக்கு சாற்றப்படும் திண்டு மாலை, அதை கட்டும் முறைகளும் கற்பிக்கப்பட்டன.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ஸ்ரீ மதுசூதனன், இந்த மாலை கட்டும் கலையின் பழமை குறித்தும், பக்தி சிறப்புகள் குறித்தும் விளக்கினார்.


- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X