மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ்
தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஷிண்டேவை, சிவசேனாவின்
பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கின்றனர். மாநிலத்தில் கூட்டணி அரசு,
பெரும்பான்மையை இழந்துவிட்டது,
ராமதாஸ் அதவாலே, மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி, மஹாராஷ்டிரா
அரசியல் பதற்றம் நல்லதல்ல
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் பதற்றம், வன்முறை, நம்பிக்கையின்மை ஆகியவை நல்லதல்ல. குடும்பத்தில் பதற்றம் நீடித்தால், அது வீட்டையே அழித்துவிடும். இது, கிராமத்துக்கு, மாவட்டத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்கும் பொருந்தும்.
அசோக் கெலாட்ராஜஸ்தான் முதல்வர், காங்.,
ஊழலற்ற ஆட்சி
மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி அளிப்பதுதான், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நோக்கம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, முக்கிய கடமையாக கருதுகிறோம்.
பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர், ஆம் ஆத்மி.