கட்டுரைப்போட்டியில் பங்கேற்று கலக்க வாருங்கள் மாணவர்களே| Dinamalar

கட்டுரைப்போட்டியில் பங்கேற்று கலக்க வாருங்கள் மாணவர்களே

Added : ஜூன் 25, 2022 | |
கோவை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு, கட்டுரைப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி, ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர்

கோவை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு, கட்டுரைப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி, ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலை 10:00 மணி முதல், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர், தங்கள் பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரைக்கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு, இரண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.போட்டிக்கு, தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம் என்பன உள்ளிட்ட தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 7 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.போட்டி நடக்கும் நாளிலேயே முடிவுகள் அறிவிக்கப்படும். இப்போட்டியில் கோவை மாவட்ட மாணவ, மாணவியர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X