கோவை:கோவையில், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில், செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ரத்தினபுரியில், சில வாரங்களுக்கு முன் சாலையோரம் இருந்த கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.இந்நிலையில், ரத்தினபுரி கண்ணப்ப நகர் ஆறாம் வீதியை சேர்ந்த வாசு (எ) சீனிவாசன், 42, பாரத் சேனா என்ற கட்சியின் கொடிக்கம்பத்தை, பள்ளிவாசல் முன்பாக நட்டார்.இதனால் மத நல்லிணக்கம், சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய போலீசார், மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். உடனடியாக பாரத் சேனா மாநில செயலாளர் வாசு (எ) சீனிவாசன் கைது செய்யப்பட்டார். கொடிக்கம்பம் நடும் வேலையில் ஈடுபட்ட ஆறுமுகம் உள்ளிட்ட இருவரை, ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.