உலகத் தலைவர்கள் 12 பேரைசந்திக்கிறார் பிரதமர் மோடி

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி,-ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உலகத் தலைவர்கள் 12 பேரை சந்திக்க உள்ளார்.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இன்று, 'ஜி7' நாடுகளின் மாநாடு துவங்குகிறது .இதையொட்டி, நேற்று டில்லியில் இருந்து புறப்படும் முன் பிரதமர் மோடி கூறியதாவது:உலகளவில் மனிதநேயத்தை பாதிக்கும் பிரச்னைகளில் சர்வதேச

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உலகத் தலைவர்கள் 12 பேரை சந்திக்க உள்ளார்.



latest tamil news


ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இன்று, 'ஜி7' நாடுகளின் மாநாடு துவங்குகிறது .இதையொட்டி, நேற்று டில்லியில் இருந்து புறப்படும் முன் பிரதமர் மோடி கூறியதாவது:உலகளவில் மனிதநேயத்தை பாதிக்கும் பிரச்னைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா, இந்தோனேஷியா, செனகல், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை ஜெர்மனி அழைத்துள்ளது.

இம்மாநாட்டின் போது ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளேன்.அத்துடன், ஐரோப்பாவில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்க உள்ளேன்.


latest tamil news


இந்தியா திரும்பும் முன், அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் உடன் பேச உள்ளேன்.அப்போது, முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளேன்.இவ்வாறு மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் பற்றி, வெளியுறவு துறை செயலர் வினய் மோகன் கவத்ரா கூறுகையில், ''பிரதமர் மோடி, 60 மணி நேர பயணத்தில், 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உலகத் தலைவர்கள் 12 பேருடன் உரையாடிய பின் இந்தியா திரும்புவார்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202212:01:46 IST Report Abuse
அப்புசாமி ,,,,
Rate this:
Cancel
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
26-ஜூன்-202209:05:45 IST Report Abuse
R D Moorthy ஜெய்ஹிந்த் கலக்கு தல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X