அசாமில் வெள்ளம் தணிகிறது: 118 பேர் உயிரிழப்பு

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கவுஹாத்தி,-அசாமில் மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து, பல இடங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது. நேற்று மழை, வெள்ளத்திற்கு மேலும், 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை, 118 ஆக உயர்ந்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா மற்றும் உப நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மழை சற்று குறைந்ததை அடுத்து,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கவுஹாத்தி,-அசாமில் மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து, பல இடங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது. நேற்று மழை, வெள்ளத்திற்கு மேலும், 10 பேர் உயிரிழந்தனர்.



latest tamil news


இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை, 118 ஆக உயர்ந்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா மற்றும் உப நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மழை சற்று குறைந்ததை அடுத்து, பல இடங்களில் வெள்ளம் வடியத் துவங்கிஉள்ளது.மாநிலத்தின் 30 மாவட்டங்களில், 45 லட்சத்திற்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர்

.கச்சார் மாவட்டத்தின் சில்சார் நகரம் ஒரு வாரமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்குள்ளோரை படகு களில் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமான படை ஹெலிகாப்டர்கள் வாயிலாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போடப்படுகின்றன.


latest tamil news


இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி பாதிப்பு மாவட்டங்கள், 28 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 33 லட்சமாகவும் குறைந்துள்ளது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியும், அவர் மகன் ஆனந்த் அம்பானியும் அசாம் முதல்வர் நிவாரண நிதியத்திற்கு,25 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் அசாமில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
26-ஜூன்-202209:37:19 IST Report Abuse
K.n. Dhasarathan மக்களின் உயிர்ப்பளிக்கு யார் காரணம்? நதி நீர் இணைப்பு என்று ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தபின் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் வரிகள் போட்டு மக்களை வதைக்கும் அரசுதான் காரணம், ஒரு தீவிரவாத தாக்குதலை விட அதிகமாக மக்கள் இறந்து போய்விட்டார்கள், லட்சக்கணக்கில் மக்களில் சொல்லமுடியாத அவதிகளில் சிக்கி தவிக்கிறார்கள், யார் காரணம்? தெலுங்கானாவில் ஒரு மாநில முதல்வர் K.C.R. செய்ய முடிந்ததை ஒரு பிரதமர் செய்ய முடியாதா? 4550 கோடி ரூபாயில் தனி விமானம் வாங்கும் பிரதமர் நதி நீர் இணைப்பு செய்யாதது ஏன்? அலட்சியம் தானே ? அசாம் மக்கள் இனியாவது விழிப்பார்களா?
Rate this:
Cancel
26-ஜூன்-202205:33:25 IST Report Abuse
அப்புசாமி அசாமில் வளர்ச்சியோ... வளர்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X