அமர்நாத் பனிலிங்க யாத்திரை; வரலாறு காணாத பாதுகாப்பு

Updated : ஜூன் 25, 2022 | Added : ஜூன் 25, 2022 | |
Advertisement
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் நடக்கவிருக்கும் அமர்நாத் யாத்திரையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கி.மீ., துாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2,755 அடி உயரத்தில் அமைந்து உள்ளது அமர்நாத் குகைக் கோவில்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் நடக்கவிருக்கும் அமர்நாத் யாத்திரையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கி.மீ., துாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2,755 அடி உயரத்தில் அமைந்து உள்ளது அமர்நாத் குகைக் கோவில். இங்கு, ஆண்டு தோறும் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகும். இந்த லிங்கம் ஆகஸ்டில் இருந்து படிப்படியாக கரையத் துவங்கும்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதியில் இருந்து, ஆகஸ்ட் வரை இந்த பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை இம்மாதம் 30ல் துவங்கி, ஆக., 11ல் நிறைவு பெறுகிறது.அமர்நாத் பனிலிங்க யாத்திரை செல்லும் வழியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், பாதுகாப்பு படையினர் வழிநெடுக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். இந்த ஆண்டு, அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில் கேமராக்கள் பொருத்தி, அதன் வாயிலாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 2019ல் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.


latest tamil news


இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகளும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு யாத்திரை நடப்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X