குஜராத் கலவர வழக்குசமூக ஆர்வலர் கைது

Added : ஜூன் 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை-குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் கீழ், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் நேற்று கைது செய்யப்பட்டார்.குஜராத்தில், ௨௦௦௨ல் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார்.இதில், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி, உச்ச
குஜராத் கலவர வழக்குசமூக ஆர்வலர் கைது

மும்பை-குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் கீழ், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் நேற்று கைது செய்யப்பட்டார்.

குஜராத்தில், ௨௦௦௨ல் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார்.இதில், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது.

இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்த மனு தள்ளுபடியானதையடுத்து, ஜாகியா குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து ஜாகியா, 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 'சிலருக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த வழக்கை தீஸ்தா செதல்வாட் பயன்படுத்தியுள்ளார். 'அவர் ஜாகியா ஜாப்ரியின் உணர்வோடு விளையாடியுள்ளார். இந்த பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறியது இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில், தீஸ்தாவை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், மும்பையில் நேற்று கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
26-ஜூன்-202210:45:37 IST Report Abuse
Vaduvooraan இவர்கள் எல்லாம் சமூக ஆர்வலர்களா? ஒரு வெங்காயமும் கிடையாது கூலிப்படையினர் தேசத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் இழி பிறவிகள் வெளி நாட்டில் இருந்து வரும் நிதியை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தேச விரோத கும்பல் ஒரு முறை குஜராத்தில் அஹமதாபாத்துக்கு அருகே எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன என்ற செய்தி வந்தபோது இந்த தீஸ்தா தாய்லாந்தில் ஜாலியாக விடுமுறையில் கூத்தடித்துக் கொண்டிருந்தார். செய்தி வந்ததும்விமானத்தில் முதல் வகுப்பு பயணம் செய்து இந்தியாவுக்கு ஓடி வருகிறார். தாய்லாந்தில் இருந்து முதல் வகுப்பில் பயணம் செய்ய என்ன கட்டணம் இருந்திருக்கும் என்பதை யோசியுங்கள். இந்த மாதிரியான ஆடம்பரச்செலவுகளுக்கு எங்கிருந்து இந்த சேவை நிறுவனங்களுக்கு பணம் வருகிறது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. நம்ம ஊரிலும் சில கூலிப்படையினர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகம் கொடுக்கும் உரிமைகளை கேலிக்கூத்தாக செய்பவர்கள் இந்த புல்லுருவிகள்
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
26-ஜூன்-202208:53:31 IST Report Abuse
N S Sankaran சமூக ஆர்வலரா? நம்பர் ஒன் சமூக விரோதி. ஊழல் காங்கிரஸ் ஆதரவில் சிறுபான்மையருக்கு என்று என் ஜி ஓ நடத்தி கொள்ளையடித்தது போக மிச்ச பணம் முழுதும் மோடியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் நீதிமன்றத்திலும் பொய் சொல்ல துணிந்த, போர்ஜரி செய்த தேச விரோதி. ஆர்வலர் என்று கூறி உண்மையான சமூக ஆர்வலர்களை இழிவு படுத்த வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X