ரேடியல் - கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் மாற்றம்! கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்க, 334 கோடி ரூபாயில், 4,756 அடி நீளத்தில், 100 அடி இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. இதில், பகிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து வசதியுடன் மேம்பாலமாக கட்ட, திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.சென்னையின் முக்கிய சாலையாக, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலைகள் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில்

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்க, 334 கோடி ரூபாயில், 4,756 அடி நீளத்தில், 100 அடி இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. இதில், பகிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து வசதியுடன் மேம்பாலமாக கட்ட, திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையின் முக்கிய சாலையாக, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலைகள் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் பொழுதுபோக்கு மையங்களும், ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகமாக உள்ளன.சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கிச் செல்வோர், இந்த இரு சாலைகளையும் பயன்படுத்துகின்றனர்.
மேலும், வேளச்சேரி- - தாம்பரம் சாலை மற்றும் பல்லாவரம் - -துரைப்பாக்கம் ரேடியல் சாலைகள், இந்த சாலைகளின் இணைப்பாக உள்ளன.

மாஸ்டர் பிளான்
ரேடியல் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பில் இருந்து, கே.கே.சாலை வழியாக செல்ல வேண்டும் அல்லது தரமணி சிக்னல், திருவான்மியூர் வழியாக செல்ல வேண்டும்.ஓ.எம்.ஆரில், தரமணி சிக்னலில் இருந்து சோழிங்கநல்லுார் சந்திப்பு வரை, 10 கி.மீ., துாரம் கொண்டது.
இந்த இடைப்பட்ட இடத்தில், துரிதமாக கிழக்கு கடற்கரை சாலைக்குச் செல்ல, இணைப்பு சாலை இல்லை. இதனால், ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல் அதிகரிக்கிறது.இதையடுத்து, ரேடியல் சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு துரிதமாக செல்ல, ரேடியல் சாலையை, கிழக்கு கடற்கரை சாலையு டன் இணைக்க, 2008ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ., மாஸ்டர் பிளானில் திட்டமிடப்பட்டது.
கடந்த 2018ல், இத்திட்டம் செயல் வடிவம் பெற்றது. துரைப்பாக்கம் சிக்னலுடன் முடியும் ரேடியல் சாலை, 10.6 கி.மீ., துாரம் கொண்டது. இதில் இருந்து நேராக, 1.4 கி.மீ., துாரத்தில், 100 அடி அகலத்தில் புதிய சாலை அமைத்து, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் இணைக்கப்படுகிறது.

துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் கரை சாலை, பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் மற்றும் அங்கிருந்து நீலாங்கரை வரை சாலை என, மூன்று கட்டமாக பணி நடைபெறுகிறது.மொத்தம், 334 கோடி ரூபாயில், 4,756 அடி நீளத்தில் இந்த சாலை அமைகிறது. முதற்கட்டமாக, துரைப்பாக்கத்தில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் கரை வரை, 2,493 அடி நீளம், 100 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

80 சதவீதம்
பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் கட்ட, மத்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதிக்காக, நெடுஞ்சாலைத் துறை காத்திருக்கிறது. கால்வாயில் இருந்து நீலாங்கரை வரை, நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளதால், மூன்றாம் கட்டமாக இங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. முதற்கட்ட பணி, 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. டிசம்பர் மாதத்தில் முடிக்கும் வகையில், பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
பகிங்ஹாம் கால்வாய் வரை, இடையூறு இல்லாமல் சாலை அமைக்கப்படுகிறது. மண் சமப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பகிங்ஹாம் கால்வாயில், படகு போக்குவரத்து விடும் திட்டத்தை கருத்தில் கொண்டு, மேம்பாலமாக கட்டப்பட உள்ளது.
இதற்கு, மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். அதன் பின், நீலாங்கரை வரை சாலை அமைக்க, 58 பேரிடம் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது. சிலர் வழக்கு தொடுத்ததால், காலதாமதம் ஆகிறது. மக்கள் ஒத்துழைத்தால், 3ம் கட்ட பணியை துவங்க தயாராக உள்ளோம்.

- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

ரேடியல் சாலை பெயர் மாற்றம்

தற்போது, துரைப்பாக்கம் சிக்னலுடன் ரேடியல் சாலை முடிவதால், 'பல்லாவரம் - -துரைப்பாக்கம் ரேடியல் சாலை' என அழைக்கப்படுகிறது. இணைப்பு சாலை முடிந்ததும், 'பல்லாவரம் - -கிழக்கு கடற்கரை ரேடியல் சாலை' என அழைக்கப்படும். இத்துடன், தற்போது 10.6 கி.மீ., உள்ள ரேடியல் சாலை, இணைப்புக்குப் பின், 12 கி.மீ., துாரமாக அதிகரிக்கும்.மூன்று கட்ட பணிகள்

ஆரம்பகட்ட பணிகள், 334 கோடி ரூபாயில், 1.4 கி.மீ., துாரம் நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட பணி, 162 கோடி ரூபாயில், 2,493 அடி நீளத்தில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட மேம்பால பணி, 30 கோடி ரூபாயில், 328 அடி நீளத்திலும், மூன்றாம் கட்ட பணி, 142 கோடி ரூபாயில், 1,935 அடி நீளத்திலும் நடைபெற உள்ளது.இதில், ௧௦௦ அடி அகல சாலையில், 82 அடி அகலத்தில் மட்டும் தார் சாலை அமைகிறது. இரு பக்கமும், 6.5 அடி அகலம் வீதம், மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. சாலை மைய பகுதியில் செடிகள் நடும் வகையில், 5 அடி அகலத்தில் தடுப்பு அமைக்கப்படுகிறது.இலகுரக வாகனம் அனுமதி

பகிங்ஹாம் கால்வாய் வரை பணி முடியும் போது, இலகுரக வாகனங்கள் செல்ல முடியும். கால்வாயில் இருந்து, பாண்டியன் சாலை மற்றும் வைத்தீஸ்வரர் நகர் சாலை வழியாக, ௧ கி.மீ., பயணித்து, கிழக்கு கடற்கரை சாலை செல்லலாம். மூன்றாம் கட்ட பணி முடிந்தால் தான், இணைப்பு சாலையை முழுமையாக பயன்படுத்த முடியும்.193 நாட்கள்

துரைப்பாக்கம் முதல் பகிங்ஹாம் கால்வாய் வரை, வயல்வெளியாக இருந்ததால், 3.5 அடி தடிமனில், 5 அடுக்குகளாக, களிமண் கலக்காத மண் போட்டு சமப்படுத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., ஆய்வு குழு பரிந்துரைப்படி, ஜூலை 1ம் தேதி முதல், 193 நாட்கள் மண் பதப்படுத்தப்படும். அதன் பின், இரண்டு அடுக்கு ஜல்லி மற்றும் இரண்டு அடுக்கு தார் கலவை கொண்டு சாலை போடப்படும்.படகு போக்குவரத்து வசதி

பகிங்ஹாம் கால்வாயில் தரைப்பாலம் கட்டி சாலையை இணைக்க, முதலில் திட்டமிடப்பட்டது. வருங்காலங்களில் படகு போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு உள்ளதால், அதை கருத்தில் கொண்டு, மேம்பாலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம், 30 கோடி ரூபாயில், 328 அடி நீளத்தில் அமைகிறது. படகு போக்குவரத்து வசதிக்காக, கால்வாய் பகுதியில், 150 அடி விட்டு, துாண்கள் அமைக்காமல் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. வழக்கமான நீர்வழி தடங்களில், 5 அடி உயரத்தில் பாலம் கட்டப்படும். இங்கு, 15 அடி உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.


- -நமது நிருபர் --


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X