மழைக்கு கரைந்த வாறுல்: அரைகுறையான பேவர் பிளாக் ரோடு; அருப்புக்கோட்டை நாகலிங்க நகர் மக்கள் குமுறல்

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை, : சிறு மழைக்கே கரைந்து போன புதியதாக அமைக்கப்பட்ட வாறுகாலின் மீது பூசப்பட்ட சிமெண்ட் பூச்சு, அரைகுறையான பேவர் பிளாக் கல் ரோடு போன்றவற்றால் மக்கள் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 17வது வார்டை சேர்ந்தது நாகலிங்க நகர். இதில், 12 க்கும், மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி, 25 ஆண்டுகளை கடந்தும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வில்லை என


அருப்புக்கோட்டை, : சிறு மழைக்கே கரைந்து போன புதியதாக அமைக்கப்பட்ட வாறுகாலின் மீது பூசப்பட்ட சிமெண்ட் பூச்சு, அரைகுறையான பேவர் பிளாக் கல் ரோடு போன்றவற்றால் மக்கள் புலம்புகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 17வது வார்டை சேர்ந்தது நாகலிங்க நகர். இதில், 12 க்கும், மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி, 25 ஆண்டுகளை கடந்தும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வில்லை என மக்கள் புலம்புகின்றனர்.

இந்தப் பகுதியின் தலையாய பிரச்சனையே வாறுகால், ரோடுகள் இல்லாததுதான்.பல ஆண்டுகளாக போராடி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒருசில தெருக்களில் வாறுகால், பேவர் பிளாக் கல் ரோடு அமைக்கும் பணி நடந்து முடிந்தது. லிங்கேஸ்வரர் கோவில் 1வது தெருவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு அரைகுறையாக நிறுத்தப்பட்டுவிட்டது. பேவர் பிளாக் கற்கள்ஆங்காங்கு பெயர்ந்து இடைவெளியுடன் இருப்பதால், நடக்க சிரமமாக உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.மெயின் தெருவில் அமைக்கப்பட்ட வாறுகால் 2 மாதங்கள் ஆன நிலையில், சில நாட்களுக்கு முன்பு, பெய்த மழையில் கரைந்து, ஜல்லி கற்கள் வெளியே தெரிகிறது.

இன்னொரு மழைபெய்தால் வாறுகால் முற்றிலும் காணாமல் போய்விடும் என மக்கள் புகார் கூறுகின்றனர்.மாரியம்மன் கோயில் குறுக்கு தெருவில் ரோடு அமைக்காமல், பழைய கட்டட கழிவுகளை கொட்டி, அவற்றை சமன் படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால், அந்த தெருவில் நடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பல மாதங்களாக இப்படியே இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. தெருக்களில் வாறுகால்கள் சீராக இல்லாததால் கழிவுநீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் வாறு கால்களை சுத்தம் செய்ய வருவதில்லை என, இப்பகுதி மக்களின் பட்டியல் கூடிக் கொண்டே செல்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X