மதுரை : மதுரை விவசாய கல்லுாரியில் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் 5 மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, வேளாண் இயக்குனர் அண்ணாதுரை, கோவை வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் கலந்து கொண்டனர்.
பன்னீர்செல்வம் பேசுகையில், ''இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுவதால் வேளாண் அலுவலர்கள் அடிமட்ட விவசாயிகளிடம் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும்'' என்றார்.கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில்,''வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டும்'' என்றார்.