மதுரை : மதுரை விரகனுார் ரிங் ரோட்டில் விவேக் என்பவரின் திருமண மண்டபத்திற்காக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று மாலை 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அஸ்திவாரத்திற்காக பள்ளம் தோண்டியபோது அருகில் உள்ள இரும்பு கடையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி காரியாபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் 48, இறந்தார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement