'டிஜிட்டல்' உயிர் வாழ் சான்று பெறுவது...எளிது!வீடு தேடி வரும் அஞ்சல் துறை சேவை

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
 காஞ்சிபுரம்:ஓய்வூதியதாரர்களுக்கு, 'டிஜிட்டல்' உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்கும் முறை, அஞ்சல் துறை வாயிலாக எளிதாக்கப்பட்டு உள்ளது. சான்று பெற, பயனாளிகள் 70 ரூபாய் சேவை கட்டணம் செலுத்தினால் போதும் என, அத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள்

 காஞ்சிபுரம்:ஓய்வூதியதாரர்களுக்கு, 'டிஜிட்டல்' உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்கும் முறை, அஞ்சல் துறை வாயிலாக எளிதாக்கப்பட்டு உள்ளது. சான்று பெற, பயனாளிகள் 70 ரூபாய் சேவை கட்டணம் செலுத்தினால் போதும் என, அத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. செங்கல்பட்டு அஞ்சலக கோட்டத்தின் கீழ், ஒரு தலைமை தபால் நிலையம், 43 துணை அஞ்சலகங்கள், 197 கிளை தபால் நிலையங்கள் செயல்படுகிறன.

'டிஜிட்டல்' வாழ்நாள்


இந்த அஞ்சலகங்களில், செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், பொன்மகன் வைப்பு நிதி, கால வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம். அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


இதுதவிர, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அஞ்சல் துறையில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வாயிலாக, 'டிஜிட்டல்' உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும் சேவை துவங்க உள்ளது. இதற்கு, தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி இணைந்து, சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.


இதன் அடிப்படையில், உங்கள் ஏரியாவிற்கு வரும் அஞ்சல் ஊழியரிடம், ஓய்வூதியத்திற்கான டிஜிட்டல் வாழ்நாள் சமர்ப்பிக்கும் முறையை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். ஜூலை -1ம் தேதி முதல், செப்டம்பர் -30ம் தேதி வரையில், ஓய்வூதியதாரர்களின், டிஜிட்டல் உயிர் வாழ் சான்று, சம்மந்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சென்று சமர்ப்பிக்க வேண்டும் என, ஆணை உள்ளது.


கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடடிக்கையால், யாரும் நேரில் சென்று சமர்ப்பிக்க வில்லை. நடப்பாண்டு, ஓய்வூதியம் பெறுவோர், டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.சான்று பெறுவதற்கு, ஓய்வூதியதாரர்கள் யாரையும் தேடி அலைய வேண்டி இருக்காது. அவரவர் வீட்டில் இருந்தே, எளிதாக சமர்ப்பிக்கலாம் என, அஞ்சல் துறை தெரிவித்து உள்ளது. இதற்குரிய பணிகள் அஞ்சல் துறை ஊழியர்களிடம் எளிதாக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, பெயர்வெளியிட விரும்பாத அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது:ஓய்வூதியதாரர்களின் சிரமம் தவிர்க்க, அஞ்சல் துறை வீடு தேடி, டிஜிட்டல் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்கும் முறை கொண்டு வந்துள்ளது. இதற்கு, ஓய்வூதியதார்களின் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண்ணுடன் கைரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று எண், சம்மந்தப்பட்ட கருவூலத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

குடும்ப ஓய்வூதியம்


அந்த எண்ணை பயன்படுத்தி நெட் சென்டரில் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். இந்த இணையசேவைக்கு, 70 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்க உள்ளனர். எனவே, மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X