ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார்.ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார்.ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி., செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.latest tamil newsவிழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:சர்வதேச பொது சுகாதார கல்வி நிறுவனம், மருத்துவத் துறையில் நம் முயற்சிகளை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். நம் கண்டுபிடிப்புகளும் புதுமையான அணுகுமுறைகளும் மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய உதவி செய்யும்.குறிப்பாக, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.மருத்துவச் சிகிச்சை செலவிற்காக மக்கள் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமரின் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தில் 90 நாட்களுக்குள் 60 ஆயிரம் நோயாளிகள் இருதய சிகிச்சை பெற்றனர். பொதுவாக மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவக் காப்பீட்டிற்குள் வருவதில்லை. ஆனால் அதையும் இந்த காப்பீட்டு திட்டத்தில் கொண்டு வந்ததற்காக நன்றி கூறுகிறேன்.இந்த சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிறுவனம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மக்களை சென்றடைய உதவும்.ஜிப்மரில் சில குறைபாடுகள் இருக்கிறது. மருந்து கையிருப்பு, போதிய மருத்துவர்கள் போன்றவை சரி செய்யப்பட வேண்டும். நம் சேவை சிறப்பாக இருக்க வேண்டும். ஜிப்ரில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளை பாராட்டுகிறேன்.நான் கவர்னராக புதுச்சேரிக்கு வந்தபோது வெறும் 4,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. அது இன்றைக்கு 17 லட்சம் தடுப்பூசிகளாக உயர்ந்திருக்கிறது.

புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.தடுப்பூசிகளையும் அது பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சென்றதில் ஆஷா பணியாளர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.புதுச்சேரியில் தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்ல வீடு வீடாக சென்றோம். அப்போது கசப்பான அனுபவங்களையும் சந்தித்தோம். சிலர் வீடுகளை சாத்திக் கொண்டனர். சிலர் திட்டினர்.அதையும் தாண்டி தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சென்றோம். அதன் விளைவாக இன்று நாடும் பாதுகாப்பாக இருக்கிறது. புதுச்சேரி மாநிலமும் பாதுகாப்பாக இருக்கிறது.இவ்வாறு கவர்னர் பேசினார்.latest tamil news


செயல்பட வேண்டும்'

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:சிறந்த தலைமையான பிரதமர் மோடியின் கீழ் இந்திய நாடு சுகாதாரத் துறையில் வெற்றி கண்டு வருகிறது, குறிப்பாக கொரோனாவை சமாளித்து தடுத்ததில் நாடு வெற்றிகரமான பணியை செய்துள்ளது. ஜிப்மரில் உள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளி இந்தியாவின் சுகாதார திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, உலகளாவிய பார்வையை பெறும். இது உலகம் ஒரு குடும்பம் என்பதை நினைவுப்படுத்துகிறது. இங்குள்ள சுகாதார நிபுணர்கள் மருத்துவ துாதுவர்களாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
26-ஜூன்-202215:12:27 IST Report Abuse
Hari தமிழசை ஒரு நல்லது செய்யுங்கோ முதலில் தமிழ் தெரிந்தவர்களை புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் பனி அமர்த்துங்கள் ,புதுச்சேரியை சுற்றி உள்ள படிப்பறிவு குறைந்த மக்கள் இந்த தமிழ் தெரியாத மருத்துவர் மருத்துவ ஊழியர்களிடம் பட்டு அவஸ்த்தை படுவதை பார்த்தால் சொல்லமுடியாத துயரமாக இருக்கு,மேலும் சென்ற வாரம் ஒரு பெண் தூக்கு மாட்டி குற்றுயிராக காலை ஐந்து மணிக்கு ஜிம்மேருக்கு கொண்டுவரப்படடார் ஆனால் பத்துமணி வரை மருத்துவமனை ஊழியர்கள் அவரை கண்டு கொள்ளவே இல்லை பத்துமணிக்கு வந்த ஒரு நார்த் இந்தியன் மருத்துவர் அவரும் பெண்தான் அவர்தான் தலைமை மருத்துவராம் எங்களால் பார்க்கமுடியாது வேறு எங்காவது தூக்கி செல்லுங்கள் என சொல்லிவிடடார் பாவம் வீடு காடு இரண்டையும் வித்து இப்போது பதினைந்து லட்சக்கம் செலவில் தனியார் மருத்துவமனையில் உயிர் பிழைக்க வைக்கப்பட்டுள்ளார் ,arasu மருத்துவர்கள் ,மற்றும் அரசின் ஊழியர்கள் போலீஸ் துறையில் உள்ளவர்கள் இனிமேல் நல்ல மனிதர்களாக இருக்க வாய்ப்பு இல்லை.முதலில் இவர்களை மக்கள் கவனிக்கணும்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202212:46:31 IST Report Abuse
Matt P மருத்துவர் பற்றாக்குறை என்றால் மருத்துவர் ஐயா ராமதாசும் அன்புமணியம் வீட்டில் பொழுது போகாமல் தான் இருப்பார்கள் அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் மருத்துவர் தானே நீங்களும் ...மக்களுக்கு உதவலாம்..பல மருத்துவர்கள் அரசியலில் குப்பை கொட்டி கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் பயன்படுத்தலாம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202204:48:23 IST Report Abuse
Fastrack இந்தியாவில் MBBS MD DM படித்தால் அமேரிக்க ஆஸ்பத்திரிகளில் வேலை கிடைக்கிறது ..நர்சிங் மற்றும் MBBS இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு படிப்பை உருவாக்கி நிறைய கிராம மாணவ மாணவிகளை தயார் படுத்தலாம்
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202212:43:32 IST Report Abuse
Matt Pஅமேரிக்காவில் சில செவிலியர்களே மருத்துவர்களாக செயல்படுகின்றனர். செவிலியற்குள்ளேயே நான்கஐந்து பிரிவுகள் இருக்கிறது. ட்ராவெலிங் நர்ஸ் என்பவர்கள் வீடுகளுக்கு சென்று முடியாதவர்களுக்கு தேவையானதை செய்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X