போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
புவனகிரி : கீரப்பாளையம் காமராஜர் கல்வி குழுமம் சார்பில், மருந்தியல் கல்லுாரியில் உலக போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கீரப்பாளையம் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை செயல் அலுவலர் தமிழரசு சம்பந்தம் வரவேற்றார். மேலாளர் கேசவன், ஆலோசகர் மணவாளன் முதல்வர் கீதா முன்னிலை வகித்தனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்


புவனகிரி : கீரப்பாளையம் காமராஜர் கல்வி குழுமம் சார்பில், மருந்தியல் கல்லுாரியில் உலக போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கீரப்பாளையம் கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை செயல் அலுவலர் தமிழரசு சம்பந்தம் வரவேற்றார். மேலாளர் கேசவன், ஆலோசகர் மணவாளன் முதல்வர் கீதா முன்னிலை வகித்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்னாள் டீன் ரமேஷ், புதுச்சேரி ஜிப்மர் டாக்டர் ஜெப்பிரின் ஆலோசனை வழங்கினர்.கல்லுாரி சேர்மன் அழகிரி தலைமை தாங்கி, பேசுகையில், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்நாளையும், குடும்பத்தையும் இழக்கின்றனர். இளைஞர்கள் சமுதாய வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். புத்தகங்களை படித்து சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டும்.

மருத்துவ தொழில் சேர்ந்தவர்களாகிய நீங்கள், போதைக்கு அடிமையானவர்களை மீட்க வேண்டும்' என்றார்.போட்டியில் வென்ற விழுப்புரம், கடலுார் மாவட்ட மருந்தியல் கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழுடன் விருது வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X