ரேஷன் கடை வழியே இணையதள சேவை

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை-தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அவை, கார்டுதாரர்களின் முகவரிக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.



latest tamil news


மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன.

அவை, கார்டுதாரர்களின் முகவரிக்கு உட்பட்ட, 2 கி.மீ., துாரத்திற்குள் அமைந்திருப்பதால் மக்களால் எளிதில் செல்ல முடிகிறது. பி.எம்.வாணி திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை தருமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, மே மாதம், கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியது.அதன் அடிப்படையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


ரேஷன் கடைகளில், 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. அங்கு மொபைல் போன், 'லேப்டாப்' எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்தலாம்.இணையதள சேவை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதனால், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும். அதிக இட வசதியுடன் சொந்த கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவுத் துறை ஆயத்தமாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202219:17:33 IST Report Abuse
சோலை பார்த்தி இதுலயும் எடை குறையுமே..வாங்காத பொருளும் வாங்கியதாக sms ல பில் வருமே..அது போல இதுலயும் ஆட்டைய போட்டுருவானுகளே
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-ஜூன்-202208:57:44 IST Report Abuse
அசோக்ராஜ் குடும்பத்தில் ஒருவர் அதிலும் மாதத்திற்கு ஒரு முறைதான் ரேஷன் கடைகளை அணுகுகின்றனர். பிள்ளைகள் ரேஷன் கடை பக்கமே போக விரும்புவதில்லை. திட்டம் வெற்றி பெற இடத்தை டாஸ்மாக்குக்கு மாற்றலாம். குடும்பத்தில் பலரும் அடிக்கடி விஜயம் செய்யும் இடம். த்ராவிஷ மாணவிகளும் மறைந்து ஒளிந்து சிரமப்படாமல் வைஃபை போர்வையில் உ.பா. வாங்கி மகிழ்வார்கள். அரசுக்கும் வருமானம் பெருகும்.
Rate this:
Cancel
26-ஜூன்-202208:46:25 IST Report Abuse
ஆதிகுடி கொற்கை அதிக இடமுள்ள ரேஷன் கடை ???யாராவது பார்த்து இருக்கீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X