சென்னை-ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, மேலும் ஐந்து முன்பதிவு இல்லாத ரயில்களின் சேவை, அடுத்த மாதத்தில் மீண்டும் துவங்குகிறது
.l அரக்கோணத்தில் இருந்து, ஜூலை 4ம் தேதி முதல், தினமும் காலை 7:10 மணிக்கு புறப்படும் ரயில், காலை 9:45 மணிக்கு வேலுார் கன்டோன்மென்ட் செல்லும். அங்கிருந்து தினமும் காலை 10:00 மணிக்கு புறப்பட்டு, பகல் 11:50 மணிக்கு அரக்கோணம் வந்து சேரும்l அரக்கோணத்தில் இருந்து, வரும் 4ம் தேதி முதல் தினமும் பகல் 12:10 மணிக்கு புறப்படும் பயணியர் ரயில், மதியம் 2:35 மணிக்கு வேலுார் கன்டோன்மென்ட் சென்றடையும். அங்கிருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:25 மணிக்கு அரக்கோணம் வந்து சேரும்l அரக்கோணத்தில் இருந்து வரும் 4ம் தேதி முதல், தினமும் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:50 மணிக்கு காட்பாடியை சென்றடையும் ரயில், அங்கிருந்து அதிகாலை 4:25 மணிக்கு புறப்பட்டு, காலை 6:06 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்l திருச்சியில் இருந்து வரும் 9ம் தேதி முதல், மாலை 4:30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், அதே நாளில் இரவு 8:20 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து தினமும் காலை 8:10 மணிக்கு புறப்பட்டு, பகல் 12:00 மணிக்கு திருச்சி வந்தடையும்l திருச்சியில் இருந்து, வரும் 9ம் தேதி முதல், தினமும் காலை 6:50 மணிக்கு புறப்படும் ரயில், காலை 11:10 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து மாலை 4:35 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:45 மணிக்கு திருச்சி வந்து சேரும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.