'மக்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும்'

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை,-'மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியதில் மரம் சாய்ந்து, அந்த வழியே வந்த கார் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில்வங்கி மேலாளராக பணிபுரியும், 52 வயது சகோதரி உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.இறந்தவர் குடும்பத்திற்கு
'மக்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும்'

சென்னை,-'மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியதில் மரம் சாய்ந்து, அந்த வழியே வந்த கார் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில்வங்கி மேலாளராக பணிபுரியும், 52 வயது சகோதரி உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பா.ஜ.,வின் ஆழ்ந்த இரங்கல்கள். சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள், எந்தவித ஆலோசகர்கள் இன்றி செயல்படுத்தப்பட்டு வருவதால் ஏற்பட்ட விபத்தா என்பதை, அறிவாலயம் அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும்.காலம் தாழ்த்தாமல் ஆலோசகர்களை உடனே நியமித்து, மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூன்-202211:51:31 IST Report Abuse
Lion Drsekar மக்கள் பாதுகாப்பு என்றால் என்ன? விபத்து, சாவு வந்தால் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கு இன்றல்ல நேற்றல்ல அன்றும் இன்றும் என்றும் இருக்கப்போவது. முன்பு மனித நேய அடிப்படையில் இழப்பீடு , நடவடிக்கை எல்லாமே வருத்தம் கலந்த பதிவு இப்போது மதம் அமைப்பு சார்ந்து எல்லாமே?? நட்ட ஈடு, அரசு வேலைவாய்ப்பு போன்ற தீர்வு?? பல பதிவுகள் செய்துவருகிறேன் தற்போது இதைவிட கொடுமை சென்னை கோடம்பாக்கம் இரயில்வே ரோட்டில் வந்து பார்த்தல் தெரியும் வெட்டப்பட்ட ரோட்டின் அந்தரத்தில் இரயில்வே ஊழியர்களின் சுற்று சுவர் எந்த வித ஆதாரமும் இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கிறது, வெட்டப்பட்ட பள்ளத்தில் முழுவதும் சாக்கடை நீர் இருந்தது தற்போது மழை நீர் , இதில் வேடிக்கை என்னவென்றால் , அந்த மழை நீரில் கம்பி கட்டி ஜல்லிபோட்டு மழை நீர் வடிகால் பணிநடைபெற்றுக்கொண்டு வருகிறது . முன்பு இருந்த அகலத்தைவிட தற்போது அகலம் இரண்டடி குறைத்து கட்டிவருகிறார்கள் , மீண்டும் கூறுகிறேன் இந்த வடிகால் அமைப்பால் ஒரு குடம் தண்ணீர்கூட கடலுக்கு செல்லாது . மக்கள் வரிப்பணம் வீணாகிக்கொண்டு இருக்கிறது . கட்டிய கால்வாய்கள் மிக அகலமாக இருந்தது அதை உடைக்கிறார்கள் , அதில் முழுவதும் ரோடு போட்டது போன்ற எல்லா கால்வாய்களிலும் முழு அடைப்பு , அதை வாரி வெளியே கொட்டி மீண்டும் கட்டும்பணி நடைபெற்று வருகிறது அதில் நேரில் ஆய்வு செய்துதான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன் பழைய கால்வாயைவிட புதிய கால்வாய் இரண்டடி குறைந்து இருக்கிறது அதில் மீண்டும் மின்சார ஒயர் மற்றும் பல ஒயர் இருப்பதை காணலாம், மொத்தத்தில் பாதுகாப்பு என்பது என்பது கெலவக்குறியே? வந்தே மாதரம்
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
26-ஜூன்-202209:40:21 IST Report Abuse
T.sthivinayagam ....
Rate this:
Cancel
26-ஜூன்-202205:58:16 IST Report Abuse
அப்புசாமி அசாமில்.போய் கூவவேண்டியவர் இங்கே கூப்பாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X