ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமேஸ்வரம்,--ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த கவர்னர் ரவிக்கு, கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து அழைத்துச் சென்றார். பின், சுவாமி சன்னிதியில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் தரிசனம் செய்தார்.அக்னி தீர்த்தம் கடல், கோவில் வளாகத்தில் உள்ள 22
ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம்,--ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்

.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த கவர்னர் ரவிக்கு, கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து அழைத்துச் சென்றார். பின், சுவாமி சன்னிதியில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் தரிசனம் செய்தார்.அக்னி தீர்த்தம் கடல், கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில், கவர்னர், குடும்பத்துடன் நீராடினார். பின், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.காலை, 7:15 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட கவர்னர், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு திரும்பினார்.காலை, 9:30 மணிக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு சென்று, கலாமின் பேரன் ஷேக் சலீம், உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின், பேக்கரும்பு என்னும் இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, காரில் மதுரை புறப்பட்டுச் சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202204:40:00 IST Report Abuse
Fastrack ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X