ராமேஸ்வரத்தில் நாளைமறுநாள் கச்சத்தீவை மீட்க ஆலோசனை

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சிவகங்கை-கச்சத்தீவை மீட்பது குறித்து ஜூன் 28 ல்(நாளைமறுநாள்) ராமேஸ்வரத்தில் மீனவ, விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என காவிரி, வைகை பாசன விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் எம். அர்ச்சுணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கச்சத்தீவு ஒப்பந்தம் 1974 ஜூன் 26ல் கொழும்பு, ஜூன் 28ல் டில்லியிலும் கையெழுத்தானது.ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு உரிய ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் நாளைமறுநாள் கச்சத்தீவை மீட்க ஆலோசனை

சிவகங்கை-கச்சத்தீவை மீட்பது குறித்து ஜூன் 28 ல்(நாளைமறுநாள்) ராமேஸ்வரத்தில் மீனவ, விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என காவிரி, வைகை பாசன விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் எம். அர்ச்சுணன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கச்சத்தீவு ஒப்பந்தம் 1974 ஜூன் 26ல் கொழும்பு, ஜூன் 28ல் டில்லியிலும் கையெழுத்தானது.ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு உரிய ராமேஸ்வரம் கிராமம் சர்வே எண் 1250 ல் 285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் இத்தீவு உள்ளது.அரசியல் நோக்கங்களுக்காக இலங்கைக்கு, இந்தியா கச்சத்தீவை தாரை வார்த்தது. இந்திய நிலப்பரப்பை வேறு நாடுகளுக்கு கொடுக்கும் முன் பார்லிமென்ட் இரு அவையிலும் ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்விஷயத்தில் அரசியல் சாசனப்பிரிவு 368 மீறப்பட்டுள்ளது. கடல் எல்லைகளை பிரித்து கொள்வது சம்பந்தப்பட்ட 1958 க்கான ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா ஒப்பந்த விதி பின்பற்றவில்லை. எனவே கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் விதிக்கும் முரணானது.இலங்கையில் தற்போது நிலவும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடியை பயன்படுத்தி மத்திய அரசு ராஜதந்திர நிர்பந்தம் மூலம் ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இது மீனவர்கள் பிரச்னை மட்டுமின்றி நாட்டின் முக்கிய பிரச்னை.

கச்சத்தீவு ஒப்பந்தம் 48 ஆண்டுக்கு முன் டில்லியில் கையெழுத்தான நாளான ஜூன் 28ல் ராமேஸ்வரத்தில் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கச்சத்தீவை மீட்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.subramanian - madurai,இந்தியா
26-ஜூன்-202212:51:33 IST Report Abuse
v.subramanian அரசியல் சாசனப்பிரிவு 368 மீறப்பட்டுள்ளது என்றும் கடல் எல்லைகளை பிரித்துக்கொள்வது சம்பந்தப்பட்ட 1958 காண ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா ஒப்பந்தம் பின்பற்றப்படவில்லை என்றும் கச்சத்தீவு ஒப்பந்தம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிக்கும் முரணானது என்றும் சொல்கிறீர்கள் இவைகளை திரும்ப எடுத்துச்சொலி மீட்கவேண்டும் குழம்பிய குளத்தில் மீன் பிடிக்க முயல்வது ஒரு தமிழனுக்கு இந்தியனுக்கு அழகல்ல இந்தியா எப்போதுமே ஒரு சாத்மீக பூமி let us always be defensive not offensive
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
26-ஜூன்-202212:14:48 IST Report Abuse
sankaranarayanan திராவிழா மாடல் ஆட்சி இருக்கும்வரை கட்சத்தீவை மீட்டெடுக்க முடியாவே முடியாது. மத்திய அரசு துணை போகாது. ஆட்சி மாறினால் நிச்சயமாக முடியும். தாரை வார்த்துக் கொடுத்தவர்களே இப்பொது ஆட்சியில் உள்ளனர். முதலைக் கண்ணிர் விடுகின்றனர். காவிரி நீர் பிரச்சனையும் அப்படியேதான். சாய்க்கரையா கமிஷனிலிருந்து விடுபட காவிரி நீர் பிரச்னையை கைவிட்டார்கள் அப்போது. அவர்களே இப்போது அதுபற்றி பேசுகிறார்கள்
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
26-ஜூன்-202210:57:47 IST Report Abuse
Visu ரகசியம் தெரிந்த ஒருத்தர் இருக்காரு அவர்கிட்ட கேட்டிங்கனா சட்டுபுட்டுன்னு முடிஞ்சுடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X