மனைவி குத்திக்கொலை; கணவர் போலீசில் சரண்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
விருத்தாசலம்-மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 32; கொத்தனார். இவருக்கும், கம்மாபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, 25, என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு துவக்க பள்ளி சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். இருவரும்
மனைவி குத்திக்கொலை; கணவர் போலீசில் சரண்

விருத்தாசலம்-மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.



கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 32; கொத்தனார். இவருக்கும், கம்மாபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, 25, என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு துவக்க பள்ளி சத்துணவு சமையலராக பணிபுரிந்தார். இருவரும் கம்மாபுரத்தில் உள்ள ராஜலட்சுமியின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர்.குழந்தை இல்லாததால், இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று ஏற்பட்ட பிரச்னையில், ஆத்திரமடைந்த நாகராஜ், கத்தியால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜலட்சுமி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நாகராஜ் சரணடைந்தார்.போலீசார் வழக்குப் பதிந்து, நாகராஜை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
27-ஜூன்-202219:03:54 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மற்ற குடும்பங்கள் புரிந்து கொள்வது என்னவென்றால் .... ..... ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X