பழைய காகித கடையில்பல்கலை விடைத்தாள்

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை காமராஜ் பல்கலையில் இருந்து மாயமான செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பழைய காகிதங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி திட்டத்தில், இளங்கலை, முதுகலை மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பல்கலையின் 'ஏ' மற்றும் 'பி' பிளாக்கில் வைக்கப்பட்டிருந்தன. இங்கு தான்

மதுரை-மதுரை காமராஜ் பல்கலையில் இருந்து மாயமான செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பழைய காகிதங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி திட்டத்தில், இளங்கலை, முதுகலை மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பல்கலையின் 'ஏ' மற்றும் 'பி' பிளாக்கில் வைக்கப்பட்டிருந்தன. இங்கு தான் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெறும். தொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட கண்காணிப்பாளர் ஒருவர், விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சென்றார்.

அப்போது, விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தன. துணைவேந்தர் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதில், ஆன்லைனில் தேர்வு எழுதிய விடைத்தாள்களில், 15 கட்டுகள் காணாமல் போனது தெரியவந்தது.இது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், மாயமான விடைத்தாள்கள், மதுரை அச்சம்பத்து, ராஜம்பாடியில், பழைய காகிதங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருப்பது தெரியவந்து, அவை மீட்கப்பட்டன.துணைவேந்தர் குமார் கூறுகையில், ''காணாமல் போன விடைத்தாள்கள் மூன்று இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பழைய பேப்பர் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம், பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X