இது உங்கள் இடம்: அரசியலில் உயர்ந்து நிற்கும் பா.ஜ.,

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கட்சி பா.ஜ., என்ற பிரசாரத்தை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. அந்தப் பிரசாரம் பொய்யானது என்பதை, பா.ஜ.,வும் அவ்வப்போது நிரூபித்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கட்சி பா.ஜ., என்ற பிரசாரத்தை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. அந்தப் பிரசாரம் பொய்யானது என்பதை, பா.ஜ.,வும் அவ்வப்போது நிரூபித்து வருகிறது.latest tamil news
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், ௨௦௧௭ல், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதியாக தேர்வானார்.

தற்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணியான, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்முவை, ஜனாதிபதியாக்க மத்திய அரசு முற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவது நிச்சயமாகி உள்ளது. இதன் வாயிலாக, சமூக நீதியை, அரசியல் லாபத்திற்காக வெறும் வாயளவில் பேசும் ஒரு கோஷமாக வைத்திருக்காமல், அதை தங்கள் கட்சி முழுமையாக பின்பற்றுவதை செயலில் காட்டி உள்ளது பா.ஜ.,


latest tamil news
இப்படி சமூகத்தின் அடித்தளத்தில் இருப்போருக்கு, உயரிய பதவியை வழங்கி வருவதன் வாயிலாக, பா.ஜ., கட்சி, இந்திய அரசியலில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. அனைவரும் பாராட்டும் கட்சியாகவும் மாறிஉள்ளது; அனைவருக்குமான கட்சியாகவும் உருவெடுத்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
26-ஜூன்-202206:41:16 IST Report Abuse
vadivelu பா ஜா க வில் பாதிக்கப்பட்ட அந்நிய கார்போரேட்டுகள், மதவாதிகள், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து தங்களை வளர்த்து கொண்ட நாடுகள் , மோடியை எதிர்ப்பதற்காகவே இந்தியாவில் சில நபர்களுக்கு வாரி வழங்கி வருகினறன. மோடியை ஊடகங்கள் மூலம் பயங்கரவாதியாக காட்டி மக்களை பிரிக்கின்றனர் இங்குள்ள எதிர் கட்சிகளும்.
Rate this:
Cancel
26-ஜூன்-202205:39:45 IST Report Abuse
SUBBU,MADURAI ராம்நாத்கோவிந்த், திரௌபதி முர்மு நம் பாரத பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த ஜனாதிபதிகளுக்கு என்னவொரு பெயர் பொருத்தம். ராம்நாத் இலங்கையின் ராஜபக்சேஎன்ற இராவணனை அழித்த இராமாயண கதாபாத்திரம். திரௌபதி என்கிற பாஞ்சாலி திமுக என்ற துரியோதனனையும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முலீக், விசிக, நாதக, மநீமை, மநேமக, மக்கள் வாழ்வுரிமை கட்சி போன்ற கௌரவர்களையும், சகுனி என்ற வீரமணியையும் அழிக்க சபதம் எடுத்த மகாபாரத கதாபாத்திரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X