பிரதமர் மோடியும், இறையன்பும்

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் அனைத்து மாநில தலைமை செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். தமிழக தலைமை செயலர் இறையன்பும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். இவர் மீது, பிரதமருக்கு தனி பாசம் என்கின்றனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் அனைத்து மாநில தலைமை செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.



latest tamil news




தமிழக தலைமை செயலர் இறையன்பும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். இவர் மீது, பிரதமருக்கு தனி பாசம் என்கின்றனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள். காரணம் இவருடைய சகோதரர் திருப்புகழும் ஒரு ஐ.ஏ,எஸ்., அதிகாரி. இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். 'பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் அவருடன் திருப்புகழ் பணிபுரிந்துள்ளார். அத்தோடு மோடிக்கு நெருக்கம். இதனால் இறையன்பு மீது பிரதமருக்கு தனி கரிசனம்' என்கின்றனர் அதிகாரிகள்.

பிரதமர் மோடி, இறையன்புடன் தனியாக அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது தமிழகத்தில், ஸ்ரீபெரும்புதுாருக்கு அருகே இரண்டாவது விமான தளம் அமைப்பது குறித்து பேசப்பட்டதாம். இந்த இரண்டாவது விமான நிலையத்தை சென்னையிலிருந்து மெட்ரோ ரயில் மூலம் இணைக்கலாம் என இறையன்பு ஆலோசனை சொன்னார்.நல்ல யோசனை என பாராட்டிய மோடி, இதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என கேட்டிருக்கிறார். 8,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் என தெரிவித்தாராம் இறையன்பு.


latest tamil news



இதற்கு, வரும் 2023- - 24 மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என, பிரதமர் உறுதி அளித்துள்ளார். இதைத் தவிர, தமிழக முதல்வரின் ஒப்புதலோடு தமிழக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பிரதமரிடம் ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளாராம் இறையன்பு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202221:47:42 IST Report Abuse
அப்புசாமி யாரு கண்டா? எந்த நரி என்ன சூழ்ச்சி செய்யுதுன்னு....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
26-ஜூன்-202212:57:35 IST Report Abuse
Girija சொந்த செலவில் ..... வைத்துக்கொண்டார் .
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
26-ஜூன்-202210:50:15 IST Report Abuse
Barakat Ali இனி துண்டு சீட்டுக்கு இறையன்பு மேல டவுட்டு வரும் ..... ஒதுக்கி வைப்பாரூ .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X