வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த கட்டடத்தை அழகுபடுத்த பல யோசனைகளை தெரிவித்துள்ளாராம் பிரதமர். தவிர, புதிய பார்லிமென்ட் அனைத்து மாநில கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக உள்ளார்.
![]()
|
இவரும், சபாநாயகர் ஓம் பிர்லாவும் இணைந்து ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர். இதை நிறைவேற்ற ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.பார்லிமென்டில் ஒவ்வொரு மாநிலத்தின் கலாசார சின்னமாக இரண்டு ஓவியங்கள் வரையப்படும் என, இந்த குழு ஆலோசனை அளித்துள்ளதாம். இதன்படி தமிழகத்திலிருந்து இரண்டு சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
![]()
|
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இரண்டும் பார்லிமென்டில் ஓவியங்களாக வரையப்பட உள்ளன. இதற்காக, விரைவில் தமிழக அரசின் சீனியர் ஓவியர்கள் டில்லி வர உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement