வாரிசு அரசியல் ஒழிகிறது

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
மும்பை: 'மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம், வாரிசு அரசியலுக்கு ஒரு எச்சரிக்கை' என, புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இது குறித்து ஒரு சீனியர் பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:கடந்த, 2014 பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். இதன் மூலம் காங்கிரசில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது. 2019 தேர்தலிலும் சோனியா குடும்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: 'மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம், வாரிசு அரசியலுக்கு ஒரு எச்சரிக்கை' என, புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



latest tamil news



இது குறித்து ஒரு சீனியர் பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:கடந்த, 2014 பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். இதன் மூலம் காங்கிரசில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது. 2019 தேர்தலிலும் சோனியா குடும்பம் தலை துாக்க முடியவில்லை.

அடுத்து, உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார். கடந்த, 2017 மற்றும் 2022ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி தோல்வியடைந்தது.இதன் மூலம் யாதவ் குடும்ப அரசியலை ஒழித்து கட்டினார் மோடி.

இதே போல பஞ்சாபிலும் அகாலி தள கட்சியின் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தார். இவருடைய குடும்பமே பல முக்கிய பதவிகளை தன் வசம் வைத்திருந்தது. இப்போது எல்லாம் 'அவுட்'


latest tamil news



இப்போது மஹாராஷ்டிராவிலும் வாரிசு அரசியலால் அங்குள்ள கூட்டணி அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே, தன்னுடைய மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வர் பதவியில் அமர்த்த ஆசைப்படுகிறார். இதனால் அங்கு ஆட்சி கவிழப் போகிறது. இங்கும் வாரிசு அரசியலுக்கு சாவு மணி அடித்துவிட்டார் மோடி.அடுத்த இலக்கு தமிழகம். விரைவில் தமிழக குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவார் மோடி. இவ்வாறு, அந்த பா.ஜ., தலைவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
26-ஜூன்-202218:20:26 IST Report Abuse
DVRR எந்த அரசியல்வாதியும் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காது . சட்டம் "அமைச்சர், முதல்வர், பிரதமர் என்னும் பதவியில் இருப்பவர்களின் ரத்த நிலை மற்றும் உடன் பிறந்த உறவுகள் மற்றும் ரத்த நிலை உறவுகளை மணந்தவர்கள் அவர்கள் பதவி இழந்தபின் அடுத்த 20 வருடத்திற்கு சட்ட சபை மற்றும் பாராளுமன்றத்திற்கு போட்டியிட தகுதியில்லை / தகுதியை இழக்கின்றார்கள் "
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202218:19:12 IST Report Abuse
Rafi சில நேரங்களில் சில தத்துக்குட்டிகள் வரம்புமீறும் செயல்களை பெருமையாக நினைத்து உண்மையை கூறி விடுகின்றார்கள். வாரிசுகள் பிஜேபி இல் பெரிய லிஸ்ட் இருக்கு.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-ஜூன்-202219:18:02 IST Report Abuse
madhavan rajanலிஸ்ட்டை வெளியிடவேண்டியதுதானே. திமுக தலைவர் வாரிசு அரசியல். அதுபோல பாஜகவில் காட்டு. இங்கு முதல்வர் பதவி வாரிசு அரசியல். அதுபோல பாஜகவில் காட்டு. கவுன்சிலை வாரிசாக இருப்பதும் கட்சித்தலைவர் வாரிசாக இருப்பதுவும் ஒன்றா?...
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
26-ஜூன்-202216:59:52 IST Report Abuse
Nellai tamilan தமிழகத்துக்கும் நல்லது நடந்தால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X